நெல்லை சீமையை நடுநடுங்க வைத்த ராக்கெட் ராஜா மீது அதிரடியாக பாய்ந்தது குண்டர் சட்டம்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ரவுடியும் , பனங்காட்டுப் படை கட்சியின் தலைவருமான ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவரது இயற்பெயர் ஆறுமுகப்பாண்டியன் அல்லது பாலவிவேகானந்தன்.

தென் மாவட்டங்களை கலக்கி வந்த கராத்தே செல்வினின் வலதுகரமாக செயல்பட்டவர் ராக்கெட் ராஜா. கராத்தே செல்வினுக்குப் பின்னர் வெங்கடேச பண்ணையார் அணியில் இணைந்தார் ராக்கெட் ராஜா. சென்னையில் வெங்கடேச பண்ணையார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்பின்னரும் ஹரிநாடார் உள்ளிட்டோருடன் இணைந்து பனங்காட்டுப் படை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார் ராக்கெட் ராஜா. சசிகலா புஷ்பா விவகாரத்தில் அவருக்கு பாதுகாப்பு படையாக இருந்தவர்கள் என ஹரிநாடார், ராக்கெட் ராஜா பெயர்கள் அடிபட்டன.
ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொலை முயற்சிகள் இருந்தன. இதில் பெரும்பாலானவற்றில் ராக்கெட் ராஜா விடுதலையாகிவிட்டார். ஆனால் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்குதான் ராக்கெட் ராஜாவை இடைவிடாமல் துரத்தியது. அண்மையில் நாங்குநேரில் சாமிதுரை படுகொலை வழக்கிலும் ராக்கெட் இதனால் ஒவ்வொரு மாநிலமாக தப்பி சென்று கொண்டே இருந்தார் ராக்கெட் ராஜா. அங்கிருந்த படியே தமது நெல்லை நெட்வொர்க்கை அசால்ட்டாக இயக்கி வந்தார்.
வெளிமாநிலங்களில் இருந்து திருவனந்தபுரம் வழியாக ஆனைக்குடிக்கு ரகசியமாக வந்து போனார் ராக்கெட் ராஜா. இந்த தகவலை அறிந்த போலீசார், ராக்கெட் ராஜாவை பிடிக்க திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் பொறி வைத்து காத்திருந்தனர். போலீசாரின் ஸ்கெட்ச் ஒர்க் அவுட் ஆகவே, திருவனந்தபுரத்தில் வசமாக சிக்கிக் கொண்டார் ராக்கெட் ராஜா.
ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தற்போது ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications