Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்’’.. பயணிகளை நெருங்கிய ஆபத்து.. வள்ளியூரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லை வள்ளியூரில் இன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அரசு பேருந்து பயணிகளுடன் சிக்கியிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் பயணிகளை பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு தமிழகத்தை கோடை வெயில் வாட்டி எடுத்த நிலையில், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும், மழை ஒட்டுமொத்த கிளைமேட்டையே மாற்றியிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை வள்ளியூரில் ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து ஒன்று சிக்கியது.

Passengers in government bus caught in rain flood in Tirunelveli Valliyur rescued safely

அதாவது இன்று மதியம் 3 மணி தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இப்படி இருக்கையில், நாகர்கோவிலிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று வள்ளியூர் ரயில்வே தரை பாலத்தை கடக்க முயன்றது.

ஆனால் அங்கு தேங்கி இருந்த மழை நீரில் பேருந்து உடனே பழுதடைந்து நின்றுவிட்டது. இதனால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 65க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர். இது குறித்து உடனடியாக வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் மாற்று பேருந்து மூலம் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து மழை நீரில் சிக்கியதால் அப்பகுதியில் லேசான சலசலப்பு நிலவியது.

முன்னதாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எனவே, மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியிருந்தது.

Passengers in government bus caught in rain flood in Tirunelveli Valliyur rescued safely

அதாவது, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கன மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

மிக கனமழை எனில் 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பொழியும் எனில் அந்த பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படும். தற்போது இந்த 26 மாவட்டங்களில் 10 செ.மீக்கும் அதிகமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+