தொடர்ந்து 2 வது முறையாக வைகோ தந்த ஏமாற்றம் .. கலிங்கப்பட்டியில் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் வழக்கமாக நடத்தப்படும் பொங்கல் விழா போட்டிகளை இந்தாண்டு ரத்து செய்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

கொரோனா பரவல் மீண்டும் தொடங்கியிருப்பதால் பொங்கல் விழா நிகழ்ச்சிகளை அவர் நடத்த விரும்பவில்லை எனக் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

இதனால் கலிங்கப்பட்டி களையிழந்து காணப்படுவதோடு வைகோவின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் உள்ளூர்காரர்கள்.

வைகோ ஊர்

வைகோ ஊர்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பொறுத்தவரை ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வெகு விமரிசையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் கொண்டாடுவது வழக்கம். குறைந்தது 3 நாட்களாவது பூர்விக வீட்டில் தங்கி கலிங்கப்பட்டி கிராமத்தில் பல்வேறு போட்டிகளை நடத்தி வைகோ பரிசுகள் கொடுத்து மகிழ்வார். பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி தொடங்கி கல்லூரி மாணவர்களுக்கு வாலிபால் போட்டி வரை நடத்தி ஊரையே திருவிழாக் கோலம் பூணச்செய்வார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்தாண்டு பொங்கல் கொண்டாட்டத்தை சொந்த ஊரில் தவிர்த்த வைகோ, அதேபோல் இந்தாண்டும் பொங்கல் விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்திருக்கிறார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. சொந்த ஊருக்கு வந்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அவர் கலிங்கப்பட்டி வருவது குறித்தும் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையாம்.

கலிங்கப்பட்டி மக்கள்

கலிங்கப்பட்டி மக்கள்

இதனிடையே கலிங்கப்பட்டி கிராமமக்களும், இளைஞர்களும் வைகோ ஊருக்கு வந்தால் பொங்கல் விழா களைகட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பொங்கலின் போது ஒவ்வொரு ஆண்டும் கலிங்கப்பட்டியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வைகோ நடந்தே நேரில் சென்று பொங்கல் வாழ்த்துக் கூறுவதை வழக்கமாக கொண்டவர். அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் அழைக்கும் விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவார்.

வீதிகள் தோறும்

வீதிகள் தோறும்

இந்தாண்டு வைகோவின் கலிங்கப்பட்டி வருகை ஒரு வேளை ரத்தானால் அவரது இடத்தில் நின்று மதிமுக தலைமை நிலையச் செயலாளரும், மகனுமான துரை வைகோ இந்தப் பணிகளில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வீதிகள் தோறும் மதிமுக கொடியை ஏற்ற ஏற்பாடுகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+