பவர் பத்திரம் தந்த கன்னியாகுமரி நிர்மலா.. ரூ.2.5 கோடி, 2 ஏக்கர் நிலம், பத்திரப்பதிவு: ஜெரால்டு எங்கே

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: போலி ஆவணம், பத்திரப்பதிவு, ஆள்மாறாட்டம், நிலவிற்பனை இவ்வளவும் செய்து, ரூ 2.5 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை அபேஸ் செய்திருக்கிறது திருநெல்வேலியை சேர்ந்த ஒரு கும்பல். இதில் ஒரு பெண்ணும் ஈடுபட்டுள்ளது, மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு 52 வயதாகிறது.. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை, சீதம்மாள் காலனியில் வசிக்கிறார். இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் நெல்லை வி.எம். சத்திரம் ஆச்சிமடம் பகுதியில் உள்ளது..

power bond kanniyakumari

தற்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ 2.5 கோடியாகும். இந்த நிலத்தை லட்சுமணன் தமது சகோதரி ஸ்ரீ வள்ளிக்கு தானமாக தந்திருக்கிறார். ஸ்ரீ வள்ளி இப்போது அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார்.

நிலவிற்பனை: இந்நிலையில், ஸ்ரீவள்ளியின் நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளரான ஜெரால்ட் செல்வராஜ் என்பவர், ஸ்ரீவள்ளியின் நிலத்தை விற்பனைக்கு கேட்டுள்ளார்.. ஆனால், ஸ்ரீவள்ளி அதற்கு மறுத்துவிட்டார்.

ஆனாலும், ஸ்ரீவள்ளியின் நிலத்தின் மீது ஜெரால்டுக்கு ஒரு கண் இருந்துவந்தது.. அதனால், போலியான நபர்களை வைத்து, ஸ்ரீவள்ளியின் நிலத்தை அபகரிக்க முயன்றார்.. இதற்காக கடந்த செப்டம்பரில் போலியான பத்திரப்பதிவு ஒன்றை தயார் செய்து, நிர்மலா என்ற பெண்ணையும் "செட்" செய்தார்கள்..

நிர்மலா: நிர்மலா பார்ப்பதற்கு அச்சுஅசல் ஸ்ரீவள்ளிபோலவே இருப்பாராம்.. இவர் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர்.. எனவே, நிர்மலாவை அழைத்து, இவர்தான் ஸ்ரீவள்ளி என்று போலியான ஆதார் அட்டை தயார் செய்துள்ளனர்.. பிறகு, ராஜசேகர் என்பவருக்கு பவர் பத்திரம் தருவது போல, பதிவு செய்தனர்.. இதையடுத்து, அண்ணாதுரை என்பவருக்கு ராஜசேகர் நிலத்தை விற்றார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஸ்ரீவள்ளியின் சகோதரர் லட்சுமணன், உடனடியாக திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் புகார் செய்தார்... இந்த புகாரின்பேரில், குற்றப்பிரிவு போலீசார் கன்னியாகுமரி நிர்மலாவை அதிரடியாக கைது செய்தனர்... ஆனால், முக்கிய குற்றவாளியான ஜெரால்டு செல்வராஜ், ராஜசேகர், அண்ணாதுரை ஆகியோர் தலைமறைவாகி விட்டதால், அவர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

கோரிக்கை: அதுமட்டுமல்ல, நெல்லையில், ரெட்டியார்பட்டியில் அரசு வழங்கிய பத்திரிகையாளர் குடியிருப்பில், இறந்து போன பத்திரிகையாளர் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தையும், இதுபோலவே ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்... இது குறித்து நில அபகரிப்பு தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர், ஆனாலும் யாரையும் கைது செய்யவில்லையாம்.. எனவே, நிலமோசடி வழக்குகளில் சிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று நெல்லையில் கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+