முடிவுக்கு வரும் 99 ஆண்டு கால குத்தகை! விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு பெற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாஞ்சோலை சிம்பட்டியில் தி பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி என்ற ஒரு நிறுவனம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

manjolai nellai tea estate

அவர்களின் குத்தகை காலம் வரும் 2028 ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெற நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில், மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் 95 ஆண்டுகளாக தொழிலாளர்கள் அங்கேயே தங்கி தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். இங்குள்ள நிலங்கள் 99 ஆண்டுகளுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலப்பகுதிகளில் காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் பயிரிட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து கூலி வேலைகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களால் உருவானது தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியாகும். இதில் பணியாற்றுகிற 80 சதவிகிதத்தினர் பட்டியலினத்தைச் சார்ந்த ஏழை எளிய தொழிலாளர்களாவார்கள்.

இவர்களது வாழ்வாதாரமே மாஞ்சோலை எஸ்டேட்டை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 8373 ஏக்கர் மற்றும் அம்பை பகுதியில் அமைந்துள்ள 23,000 ஏக்கரையும் காப்பு காடாக கடந்த 28.2.2018 இல் அரசிதழில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாத இறுதிக்குள் எஸ்டேட்டை காலி செய்து விட்டு அனைவரும் வெளியேற வேண்டுமென எஸ்டேட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ஐந்து தலைமுறைகளாக இந்த மலைப் பகுதியில் வாழ்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த இவர்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த வீடோ, வீட்டு மனையோ இல்லாமல் நிராயுதபாணிகளாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு பாரம்பரியமான தோட்ட தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது.

இத்தகைய பின்னணியில் உள்ள தொழிலாளர்களை திடீரென வெளியேற்ற முற்படுவது அப்பட்டமான தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட அகதிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திருக்கிறோம்.

அதுபோல, மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு தேயிலை தோட்ட தொழிலையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இப்பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என அரசியல் கட்சியினர் தமிழக அரசை கேட்டுக் கொண்டனர். மேலும் தேயிலை கம்பெனியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் குத்தகை முடிவதற்கு முன்பே அந்த தனியார் நிறுவனம் தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டுள்ளது.

தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வயது, அனுபவம் அடிப்படையில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். விருப்ப ஓய்வு பெறும் பட்சத்தில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போனஸ் மற்றும் கருணைத் தொகை மட்டுமல்லாது அனைத்து வகையான பலன்களையும் கொடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான அழைப்பை நோட்டீஸ் மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் விடுத்துள்ளது. விருப்ப ஓய்விற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+