Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது யுத்தம்.. மோடியால் தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது.. ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிறார் மோடி. ஆனால் பெரும் செல்வந்தர்களின் 14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதால் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

Rahul gandhi slams PM modi in nellai election campaign meeting

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி எம்.பி தமிழ்நாடு வருகை தந்துள்ளார். இன்று திருநெல்வேலியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுல் காந்தி பேசுகையில், "தமிழ்நாட்டு மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டைப் பார்ப்பேன்.

இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புதமான கண்ணாடி தமிழ்நாடு. தமிழ்நாட்டு மக்கள் மீது நான் கொண்டுள்ளது அரசியல் உறவு அல்ல, குடும்ப உறவு. தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் உங்கள் பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்.

பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண் தந்துள்ளது. எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.

தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிறார் மோடி. அதேசமயம் பெரும் செல்வந்தர்களின் 14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார் பிரதமர் மோடி.

சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அனைத்து அரசு அமைப்புகளும் ஆர்.எஸ்.எஸ் காரர்களால் நிரப்பப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையர்கள் நாட்டின் பிரதமர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன் 2 மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை. அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கொக்கரிக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்காக நாம் மேற்கொண்டுள்ள யுத்தம் தான் இந்த தேர்தல்.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு மிகப்பெரிய பிரச்சனை என்பது எனக்கு தெரியும். மத்தியில் ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழ்நாடு அரசிடமே முடிவு விடப்படும். மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம்." என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

தொடர்ந்து, “இந்தியாவில் தற்போது நடப்பது சித்தாந்தப் போர். ஒரு பக்கம் பெரியாரின் சமூகநீதிக்கும், இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் மோடியின் வெறுப்பரசியலுக்கும் இடையே நடக்கும் போர். இதில் நாம் வென்றாக வேண்டும். தமிழ் வெறும் மொழி அல்ல. தமிழ் மொழி என்பது வாழ்வியல் முறை. தமிழ் மொழி மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.

இந்த தேர்தல் என்பது தத்துவப் போர். உங்கள் மொழியையும் பண்பாட்டையும் காப்பாற்ற உங்களோடு எப்போதும் இருப்போம். இந்திய அரசிலமைப்பு சட்டத்தைக் காக்கும் போரில் நாம் வெற்றி பெறுவோம். இந்திய ஜனநாயகத்தை காக்கவும் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்குமான யுத்தம்தான் இந்த தேர்தல்.

இந்த யுத்தத்தில் நாம் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். மோடி மட்டுமல்ல, இந்த உலகின் எந்த சக்தியாலும் தமிழர்களையோ தமிழ்மொழியையோ தமிழ் பண்பாட்டையோ தொட்டுப் பார்க்கக் கூட முடியாது.” எனப் பேசியுள்ளார் ராகுல் காந்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+