பரிவட்டம் கட்டி... நெல்லையப்பர் கோவிலில் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பரிவட்டம் கட்டி ராகுல்காந்தி இன்று சுவாமி தரிசனம் செய்தார், அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் பழங்கால சிற்பங்களை ராகுல் காந்தி பார்வையிட்டார் .

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி 2-வது நாளாக நெல்லையில் பிரச்சாரம் செய்தார். இன்று காலையில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வியாளர்கள் இடையே கலந்துரையாடினார்.

அப்போது 70 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷாரை அவரது சொந்த நாட்டிற்கு விரட்டியது போல் நரேந்திர மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம் என்று பேசினார். இதைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் ராகுல் காந்தி.
Shri @RahulGandhi visits Arulmigu Nellaiappar Temple, Triunelveli, performed rituals and takes blessings. #TNwithRahulGandhi pic.twitter.com/BWTXMVOE9W
— Youth Congress (@IYC) February 28, 2021
வெளி பிரகாரம் வழியாக காந்திமதி அம்மன் சன்னதிக்கு சென்ற அவருக்கு கோவில் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராகுலுக்கு பரிவட்டம் கட்டி பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து நெல்லையப்பர் சன்னிதிக்கு வந்த ராகுல் காந்தி கோவிலின் வரலாற்றை கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் கோவில் சிறப்புகளையும் தெரிந்து கொண்ட அவர் அங்குள்ள சிற்பங்களையும் பார்வையிட்டார். அங்கிருந்து வெளியே வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது. மேல ரத வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ராகுல். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications