எங்களை தொட்டிருக்க கூடாது சிங்காரம்.. தவெகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் மாஸ் முடிவு.. விஜய் ஷாக்
திருநெல்வேலி: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் முதல் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வரை அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். திமுக மிரட்டியதால் ரஜினி அரசியலில் பின் வாங்கி விட்டார் என ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். (Rajinikanth)
இதற்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ரஜினியும் அதை திட்டவட்டமாக மறுத்து விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் இந்த விவகாரத்தை தவெகவுக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரமாக முன்னெடுத்து நெருக்கடி கொடுக்க ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நேரில் மன்னிப்பு கேட்கணும்
திருநெல்வேலி ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டேன். இந்தமுறை திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன். நான் எதற்காக களமிறங்குகிறேன் என்று உங்களுக்கு தெரியும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தான் களமிறங்குகிறேன்.
அவர்கள் எங்களை சீண்டக் கூடாது என நினைத்தோம். எங்களை சீண்டிவிட்டனர். அதனால் வெற்றிக் கழகம் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவார்கள். எங்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்பதாக நேற்று அறிவித்துவிட்டார். அதை நாங்கள் ஏற்க மாட்டோம். இது சாத்தியப்படாது. எங்கோ மேடையில் பேசுவதை எல்லாம் ஏற்க முடியாது.
234 தொகுதிகளில் மாஸ் திட்டம்
அவர்கள் எங்கள் தலைவரிடம் நேரடியாக சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும். இது எங்கள் கோரிக்கை. அப்போதுதான் நாங்கள் எங்கள் முடிவில் இருந்து வாபஸ் பெறுவோம். தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். 234 தொகுதிகளிலும் உங்களை எதிர்த்து எங்கள் ஆட்களை நிறுத்துவோம். விஜய் எங்கு நிற்கிறாரோ அந்த தொகுதியிலும் நான் வேட்புமனுத்தாக்கல் செய்வேன்.
எங்கள் முடிவுக்கு ரஜினிகாந்த் பக்க பலமாக இருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவரால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நாங்கள் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டுள்ளோம். ரஜினி எங்களுக்கு அனுமதி வழங்குவார். எங்களிடம் மோதிவிட்டார்கள் என்பதால் நிச்சயம் அனுமதி வழங்குவார். நான் இப்போது வேட்பு மனு வாங்கிவிட்டேன். மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வேன்" என்றார்.
-
பிரசாரத்தை திடீர் திடீரென ரத்து செய்யும் விஜய்! புரசைவாக்கம் ரோடு ஷோவும் ரத்தால் தொண்டர்கள் ஏமாற்றம் -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
ஆதவ் அர்ஜுனா? திருநங்கை ரோஷினி? கார்த்திக் மோகன்? வில்லிவாக்கம் தொகுதியில் முந்துவது யார்? -
இது தான் தவெகவின் அஜெண்டா.. விஜய் தரப்பு வெளியிட்ட ஏழு முக்கிய திட்டங்கள் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
விஜய்க்கு ஓட்டு போடனும்.. முதியவர் சொல்லியும் காங்கிரஸ்க்கு குத்திய அதிகாரிகள்? காரைக்குடியில் மறியல் -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
மீண்டும் மீண்டுமா.. பிரசார வேனில் தொங்கிய தவெக தொண்டர்.. பவுன்சர் செய்த காரியம் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள்












Click it and Unblock the Notifications