ராகுல் சொல்வது சரிதான்.. மோடி "திருடன்தான்".. அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பு பேச்சு
நெல்லை: ராகுல் சொல்வது சரிதான். மோடி திருடன்தான் என அதிமுக பிரசாரத்தில் சரத்குமார் பரபரப்பாக பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளித்து பிரசாரம் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி அவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

வரவில்லை
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அதிமுக வேட்பாளர் எச் மனோஜ் பாண்டியனை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தார். ஆனால் வேட்பாளர் வராமல் இவர் மட்டும் பேசினார்.

நியாயம்
அப்போது அவர் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி டீ விற்று முன்னேறியவர். நான் பேப்பர் விற்று முன்னேறினேன். நான் நாட்டாமை. அதனால் நியாயத்தை மட்டுமே பேசுவேன்.

திருடன்
பிரதமர் மோடி தன்னை மக்களின் காவலாளி என்கிறார். ஆனால் ராகுல் காந்தியோ மோடி காவலாளி அல்ல, அவர் ஒரு திருடன் என்கிறார். ஆமாம் அவர் ஒரு திருடன்தான்.

உழைக்க காத்திருப்பு
மக்களின் மனங்களை கவர்ந்த திருடன். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என நினைத்து நினைத்து மக்களின் உள்ளங்களை களவாடியவர். உங்களுக்காக உழைக்க காத்திருப்பவர்தான் பாரத பிரதமர் மோடி என்றார் சரத்குமார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications