தனிமையில் விதவை பெண்.. 3 முறை அபார்ஷன்.. கொதித்தெழுந்து நடத்திய தர்ணா.. எகிறி தப்பிய இளைஞர்..!
விதவை பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்
நெல்லை: இளம் பெண்களை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, கர்ப்பமாக்கிவிட்டு பணம் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பிய இளைஞர்களை நெல்லை போலீசார் தேடி வருகின்றனர்..!
Recommended Video
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ளது முருகேசபுரம் என்ற பகுதி.... இங்கு வசித்து வருபவர் சசிகலா.. இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமானது.. ஆனால், கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளது.. இந்நிலையில் சசிகலா திசையன்விளை மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார்..

மலர்ந்த காதல்
அப்போதுதான் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக வளர்ந்துள்ளது.. ஒருகட்டத்தில் சசிகலாவை 2வது திருமணம் செய்து கொள்வதாக முத்து கூறியுள்ளதாக தெரிகிறது.. இதனால் சசிகலாவும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார்.. ஆனால், விரைவில் திருமணம் செய்வதாக சொல்லி சொல்லியே, பலமுறை சசிகலாவுடன் முத்து உல்லாசமாக இருந்துள்ளார் இதனால் சசிகலா 2 முறை கர்ப்பமாகி, அதனை அபார்ஷனும் செய்துள்ளார்.

திருமணம்
இந்நிலையில் இப்போது 3 முறையும் கர்ப்பமாகி 3 மாசம் ஆகிறாம்.. இப்போதும் திருமணம் செய்து கொள்ள முத்து மறுத்துள்ளதாக தெரிகிறது.. இப்படி பலமுறை தன்னை ஏமாற்றி வந்த நிலையில், மனம் நொந்துபோன சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.. திசையன்விளை போலீசாரும் முத்துவை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.. சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக போலீசில் முத்துவும் ஒப்புக் கொண்டார்..

நகை, பணம்
ஆனால் அதற்கு பிறகு அதை பற்றி பேச்சையே எடுக்க காணோம்.. இன்றுவரை சசிகலாவை முத்து திருமணமும் செய்யவில்லை.. அதுமட்டுமல்ல, சசிகலாவை ஏமாற்றி அவரிடமிருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதனால் பொறுமையிழந்த சசிகலா, முத்துவின் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.. தன்னை உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தில் அவர் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நர்சிங் படிப்பு
இதுபோலவே, இதே திசையன்விளையில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. முத்துபேச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரியங்கா என்பவர் நர்சிங் படித்து முடித்துள்ளார்.. இவரும் அவரது வீட்டின் அருகே உள்ள அஜித்குமாரும் என்பவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர் .. இவரும் பிரியங்காவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.. இறுதியில் ஆந்திராவில் உள்ள வேறொரு பெண்ணை, அஜித்குமார் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது..

இளைஞர்களுக்கு வலை
அதுமட்டுமல்ல, பிரியங்காவை ஏமாற்றி 5 லட்சம் பணம் மற்றும் நகைகளை அஜித் குமார் ஏமாற்றி வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.. தன்னை ஏமாற்றிய அஜித்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியங்காவும் திசையன்விளை போலீசில் புகார் செய்துள்ளார்.. இந்த 2 புகார்களையும் பெற்றுக்கொண்டு திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து, அது தொடர்பான இளைஞர்களுக்கு வலையை வீசியுள்ளனர்..!












Click it and Unblock the Notifications