Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்லைனில் கத்தி வாங்கி, 650 கிமீ பயணித்து வந்த சிறுவன்.. திருநெல்வேலி காதலி கொலையில் திடுக் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலியில் காதலியின் கழுத்தை அறுத்த சிறுவன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காதலியை கொல்ல ஆன்லைன் மூலம் கத்தியை ஆர்டர் செய்ய முடிவு செய்த சிறுவன், தனியார் ஆப் ஒன்றில் கூர்மையான கத்தியை வாங்கியுள்ளான். பின்னர், கத்தியை எடுத்துக் கொண்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி வந்தது தெரியவந்தது.

ஒரு தலைக்காதலால் இளைஞர்கள் மோசமாக நடந்து கொள்வது மிகவும் கவலைக்குரிய விஷயம். அண்மையில் தான் காதலித்த பெண் திடீரென தன்னோடு பேச மறுத்துவிட்டதால், அந்த பெண்ணை ரயிலில் தள்ளி கொடூரமாக கொலை செய்தான் ஒரு சென்னை இளைஞன். இதை கேள்விப்பட்டு அந்த பெண்ணின் தந்தை இறந்து போனார். சில நாட்களில் அவரது அம்மாவும் உடல் நலக்குறைவால் இறந்து போனார்.

Shocking information has come out about the boy who slit his girlfriends throat in Tirunelveli

ஒருவரின் காதல் வெறி ஒரு குடும்பத்தில் எல்லாரையும் அழித்துவிட்டது. சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த இந்த சம்பவம் போல் அடிக்கடி நடக்கிறது. தன்னுடைய காதலி தனக்கு மட்டும் தான் சொந்தம். தன்னை விரும்ப மறுத்தால், அல்லது வேறு ஒருவரை திருமணம் செய்தால் அவரை அழிக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு கொடூரமான மனநிலை. இப்படிப்பட்டவர்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்களை வயது வந்தவர்களாக கருதி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண் காதல் விவகாரத்தில் 18 வயது நிரம்பாத சிறுவனால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். அந்த சிறுவன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.

திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடைய மூன்றாவது மகள் சந்தியா. இவருக்கு 18 வயது ஆகிறது.

இவர் திருநெல்வேலி டவுன் கீழ ரத வீதியில் இயங்கி வரும் பேன்சி கடைக்கு தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று கடைக்குத் தேவையான கூடுதல் பொருட்களை, அதே தெருவில் உள்ள குடோனில் இருந்து எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்டார் இந்த சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்துவந்த திருநெல்வேலி போலீசார், இளம்பெண் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கொலை நடந்த இடத்திலேயே கூர்மையான கத்தி இருந்தது. இதை கண்ட போலீசார் அனுபவமில்லாத நபர்தான் இக்கொலையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியும் என்று சந்தேகித்தனர்.

இதையடுத்து இளம்பெண் என்பதால் காதல் விவகாரமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் சந்தியாவின் தோழிகளிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பக்கத்து கடையில் வேலை செய்து வந்த 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன் சந்தியாவுடன் நெருங்கி பழகியதாகவும், நாளடைவில் சந்தியா அவனை வெறுத்து ஒதுக்கியதாகவும் கூறினார்கள்.

மேலும், சந்தியாவுக்கு அச்சிறுவன் காதல் தொல்லை அளித்து வந்ததும், அச்சிறுவன் திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே தோப்பூரைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே, உடனடியாக மூலைக்கரைப்பட்டி போலீசார் தோப்பூர் சென்று காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை பிடித்து வந்து திருநெல்வேலி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்தியாவிற்கு காதல் தொல்லை கொடுத்து வந்த சிறுவன், குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளான்.

காதலிக்க மறுப்பு: சந்தியா வேலை பார்த்த கடைக்கு அருகில் வேலைக்கு சேர்ந்துள்ளான். அப்போது சந்தியாவுடன் அடிக்கடி சந்தித்து பேசினார், ஒரு கட்டத்தில் சந்தியாவை விரும்பிய சிறுவன், அவரிடம் சென்று தனது காதலை கூறியுள்ளான். ஆரம்பத்தில் சந்தியாவும் சிறுவனின் காதலுக்கு ஓகே சொன்னாராம்.. ஒருகட்டத்தில் அச்சிறுவன் வேலையை உதறிவிட்டு, சென்னைக்கு சென்று அங்கு வேலையில் சேர்ந்துள்ளான். அதன் பிறகு சந்தியா திடீரென சிறுவனிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறார். சிறுவன் சென்னைக்கு சென்ற பிறகு, சந்தியா வேறொரு நபரை காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் கத்தி: இதை அறிந்த சிறுவன், சந்தியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, உன்னை பிடிக்கவில்லை என சந்தியா கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனக்கு கிடைக்காத சந்தியா வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்து அவரை கொல்ல திட்டமிட்டுள்ளான். திருநெல்வேலி டவுனில் சட்டென பெரிய ஆயுதத்தை எடுத்து தாக்கி கொல்ல முடியாது என்பதால் கத்தியை வாங்க முடிவு செய்துள்ளான் சிறுவன். ஆனால் கத்தியை கடைக்கு போய் வாங்கினால் சந்தேகப்படுவார்கள் என்பதால், ஆன்லைன் மூலம் கத்தியை ஆர்டர் செய்ய முடிவு செய்திருக்கிறான் சிறுவன். இதற்காக தனியார் ஆப் ஒன்றில் கூர்மையான கத்தியை வாங்கியுள்ளான்.

இறுதி எச்சரிக்கை: பின்னர், கத்தியை எடுத்துக் கொண்டு சிறுவன் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்துள்ளான். சந்தியா தினமும் கடையிலிருந்து குடோனுக்கு செல்வது சிறுவனுக்கு தெரியும் என்பால், அவர் வரும் வரை அங்கேயே காத்திருந்துள்ளான். பின்னர் சந்தியா வந்த உடன், குடோனில் வைத்து மீண்டும் தன்னை காதலிக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளான். அப்போதும் சந்தியா திட்டவட்டமாக சிறுவனின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

சிறுவன் கைது: இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தியா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர், சிறுவன் கத்தியை அங்கேயே விட்டுவிட்டு , சொந்த ஊரான தோப்பூருக்குச் சென்றுள்ளான். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்டிருக்கிறான். சிறுவன் இன்னும் 18 வயதை நிரம்பாததால், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+