தமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்
திருநெல்வேலி: தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (வயது 89) உடல் நலக்குறைவால் காலமானார்.
.
திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி வயது 89. இவர் தான் தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீன் ஆவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில், சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையை சேர்ந்த தீர்த்தபதி தான் முருகதாஸ் தீர்த்தபதி.
Recommended Video

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன்தான் நிர்வகித்து வந்தது. இந்த ஜமீன் பரம்பரையின் 31-வது மற்றும் கடைசி ஜமீனான முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலாமனார். தமிழகத்தில் கடைசி ஜமீனாக சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி இருந்தார். இவரும் இப்போது உயிரிழந்துவிட்டார்.
சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்கிறார்கள்.
18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நமது சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் கேரள ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் கதையை வைத்து சிவகார்த்திகேயன் நெப்போலியன் நடிப்பில் சீம ராஜா படம் வெளியாகி இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications