நெல்லையில் பயங்கரம்! மாமியார்- மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் குடும்ப தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி செல்வராணி. இவர்களது மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் மருமகன் மரியகுமாருக்கும், பாஸ்கர்- செல்வராணி தம்பதிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மருமகன் மரியகுமார், மாமியார், மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இதையடுத்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications