தாத்தாவை தாக்கியதால் ஆத்திரம்.. தந்தை உள்பட இருவரை கொலை செய்த மகன்கள் கைது.. நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம், மேலச்செவலில் குடும்ப தகராறு காரணமாக மகன்களே தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம், மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்விக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. ஆனால் குடும்பத் தகராறு காரணமாக செல்வி குழந்தைகளுடன் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளூரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
ஆனால் தொடக்கம் முதலே தனது மனைவியை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று செல்லக்குட்டி, தனது மாமனார் மாடக்கண்ணு வீட்டிற்கு சென்று தகராறு செய்து வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. இதே பிரச்சனைக்காக தனது மாமனாரை கொலை செய்ய முயன்றதாகவும் செல்லக்குட்டி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது.

மதுபோதையில்
இந்தப் பிரச்சனையில் செல்லக்குட்டியின் நண்பர் சுப்பு குட்டியும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கமாக செல்ல குட்டியும், சுப்புக்குட்டியும் இணைந்து குடிபோதையில் சென்று மாடக்கண்ணு வீட்டில் தகராறு செய்து இருக்கின்றனர்.

அரிவாள் வெட்டு
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடக்கண்ணுவை தாக்கி இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய செல்லகுட்டியின் மகன்கள் இருவரும் சம்பவம் அறிந்து மற்றும் சிலருடன் சேர்ந்து செல்ல குட்டி மற்றும் சுப்புக் குட்டியை அரிவாளால் தாக்கியுள்ளனர்.

பலி
இந்த நிலையில் நேற்று இரவே சுப்புக்குட்டி மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போன்று செல்லக்குட்டி அரிவாளால் தாக்கப்பட்ட நிலையில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவக் கல்லூரி
இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்லக்குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆசை ராவத் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செல்லக்குட்டியின் மகன்கள் இருவர் உட்பட சிலரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications