கன்னியாகுமரி மக்களே..நடக்குது மேஜர் மாற்றம்.. திருநெல்வேலி டூ நாகர்கோவில் போறவங்க.. நோட் பண்ணுங்க
திருநெல்வேலி: திருநெல்வேலி- நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆரல்வாய்மொழி- கன்னியாகுமரி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை சில ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "திருநெல்வேலியில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணி மற்றும் இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி வரும் முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
அதே போல, கன்னியாகுமரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் நாளை (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. அதே தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறபட்டு, கன்னியாகுமரி வரும் சிறப்பு ரயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டு, கன்னியாகுமரி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, கொச்சுவேலி வரும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20691) வருகிற 31-ந்தேதி வரை திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் வரும் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12689) இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் செல்லும் அந்தியோதியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை திருநெல்வேலியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும்.
அதே போல நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12690) மார்ச் 31-ந்தேதி மட்டும் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வேயின் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications