ரூ.1000 உரிமைத்தொகை.. திங்கட்கிழமை வெளியாகும் அறிவிப்பு.. சபாநாயகர் அப்பாவு குட்நியூஸ்! சூப்பர்

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்து இருந்தது.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ரூ.1000 உரிமைத்தொகை குறித்து முக்கிய விஷயத்தை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021ல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர பல காரணங்களை கூறினாலும் அதன் தேர்தல் அறிக்கை மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்

முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்

இதனை எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் முக ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து இந்த திட்டம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வெளியாகும் புதிய தகவல்கள்

வெளியாகும் புதிய தகவல்கள்

குறிப்பாக பட்ஜெட்டில் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுவதோடு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் 35 கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மாறாக அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு இந்த திட்டம் பொருந்தாது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றிய முழுதகவல் வரும் நாட்களில் தான் வெளியாக உள்ளது.

 திங்கட்கிழமை பட்ஜெட்

திங்கட்கிழமை பட்ஜெட்

மேலும் தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்றயை தினமே தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலின்போது தான் ரூ.1000 உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

அப்பாவு சொன்ன குட்நியூஸ்

அப்பாவு சொன்ன குட்நியூஸ்

இந்நிலையில் தான் ரூ.1000 உரிமைத்தொகை குறித்து சபாநாயகர் அப்பாவு நெல்லையில் பேசினார். அப்போது அவர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுபற்றி அப்பாவு பேசிகையில், ‛‛ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை தருவதாக கூறினீர்களே.. அது கிடைக்குமா? என எதிர்பார்க்கிறீர்கள். நிச்சயமாக, நாளை மறுநாள் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி நிலை அறிக்கை(பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் நிச்சயமாக தேர்தல் அறிக்கையில் முதல்வர் சொன்ன திட்டமான குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும்'' என்றார். இதன்மூலம் ரூ.1000 உரிதை்தொகை தொடர்பான திட்டம் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதை சபாநாயகர் அப்பாவு உறுதி செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+