மாணவ - மாணவிகளுக்கு சித்ரவதை.. நெல்லை நீட் பயிற்சி மையத்தில் கொடுமை.. கண்மூடித்தனமான தாக்குதல்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் பிரபல ‛நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையத்தில் ரத்தம் வரும்படியாக மாணவர்களை பிரம்பால் அடித்ததும், மாணவிகள் மீது காலணி, டஸ்டர் உள்ளிட்டவற்றை வீசியும் சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டில் தற்போது இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதுநிலை மருத்துவ படிப்புக்கும் ‛நீட்’ தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தான் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் பலரும் ‛நீட்’ தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

மாணவர்களில் ஒரு தரப்பினர் வீடுகளில் இருந்தபடியே தங்களது பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டலின்படி ‛நீட்’ தேர்வுக்கு படித்து வருகின்றனர். அதேபோல் இன்னொரு தரப்பு மாணவர்கள் லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து ‛நீட்’ தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து ‛நீட்’ தேர்வுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர். மருத்துவ படிப்பை பொறுத்தவரை ‛நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ‛நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அந்தகட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது.
‛நண்பன் பட பந்தம்’.. விஜயின் தவெக மாநாட்டில் பங்கேற்கும் பிரபலம்? கவனம் பெறும் நடிகர் ஜீவா!
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ என்பது திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் ‛நீட்’ தேர்வு மையத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. வீடியோவில் ஒருவர், அதேபோல் பயிற்சி மைய வகுப்பறையில் மாணவ - மாணவிகள் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது உள்ளே வரும் ஒருவர் மாணவி மீது காலணி கொண்டு எறிகிறார்.
அந்த காலணி மாணவி மீது விழுகிறது. அதாவது மாணவி பயிற்சி மைய வாசலில் முறையாக காலணியை கழற்றிவிடவில்லை என்று கூறி வீசியுள்ளார். அதேபோல் வகுப்பறையின் கரும்பலகை எழுத்தை அழிக்க பயன்படுத்தும் டஸ்டரை கொண்டும் அவர் மாணவிகள் மீது வீசியதாக சொல்லப்படுகிறது.
வயநாடு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி? பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வியூகம்! பரபர தகவல்
அதுமட்டுமின்றி மாணவர்களை ஆக்ரோஷமாக திட்டுகிறார். அதுமட்டுமின்றி மாணவர்களை வரிசையாக வரவைத்து பிரம்பால் கண்மூடித்தனமாக மிகவும் கொடூரமாக தாக்குகிறார். மாணவர்கள் ஒவ்வொருவராக அவரிடம் பிரம்பு அடி வாங்கி கொண்டு சுவற்றின் அருகே சென்று நிற்கின்றனர். இதில் சில மாணவர்களின் கால், தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இதுபற்றி மாணவ-மாணவிகள் சார்பில் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் வீடியோ வெளியான நிலையில் சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் மற்றும் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகள் மீதான இந்த சித்ரவதை வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் அந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications