Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.6000! ஸ்டாலின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் வழங்கப்படும் என்று ஆய்வு மேற்கொண்ட பின் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கனமழையால் பெரும் பாதிப்பை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் சந்தித்துள்ளன. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது. தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் இரு மாவட்டங்களும் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில், இன்று மழை வெள்ள பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Tamil Nadu CM announces Rs 6,000 each for flood-affected families in Nellai, Tuticorin District

17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17 ஆம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன அளவை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால், இரு மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை பெய்யாத அளவுக்கு மழை பெய்துள்ளது. காயல்பட்டினம் பகுதியே வெள்ளக்காடானது.

மிகவும் மோசமாக உள்ளது: ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததை எல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஒரு சில இடங்களில் 1871 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக மழை பெய்துள்ளது. அதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல வட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றிலும் சுற்றி இருக்கும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சற்றே தாமதம் கிடைத்தாலும் அதுஅளித்துள்ள அளவைவிட அதிகமான மழை பெய்துள்ள சூழலிலும் தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. பெருமழையின் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் கால்நடை இழப்பை சந்தித்து இருக்கக் கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும்.

பாசன பயிர்களுக்கு இழப்பீடு: இந்த மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும், சேதம் அடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய் இருந்ததை ரூ. 17,000 ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு அதற்கு மேலாக சேதமுற்று இருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் ரூபாயிரத்தில் இருந்து 22, 500 ஆக உயர்த்தி வழங்கிடவும் மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாயில் இருந்து 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்,

மீன்பிடி வலைகள்: 33 ஆயிரமாக இருந்த எருது பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை 37,500 ஆக உயர்த்தி வழங்கிடவும் 3 ஆயிரமாக இருந்த வெள்ளாடு செம்மறி ஆடு நிவாரணத்தை 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் சேதம் அடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளை பொறுத்தவரையில் முழுமையாக சேதம் அடைந்த கட்டுமரங்களுக்கு மீன்பிடி வலைகள் உள்பட 32 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும்,

பகுதியாக சேதம் கட்டுமரஙக்ளுக்கு பத்தாயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும் முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானிய தொகை 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாகவும் முழுவதும் சேதம் இயந்திர படகுகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை 5 லட்சத்திலிருந்து 7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும் சேதம் அடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

ரூ.6000 யார் யாருக்கு?: அதி கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களிலும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+