"தம்பி ஞானசேகரன்" சர்ச்சை வீடியோ.. உண்மை என்ன தெரியுமா? சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!
திருநெல்வேலி: "தம்பி ஞானசேகரன்" என்று சபாநாயகர் அப்பாவு பேசிய விவகாரம் தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளார். வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வீடியோ வெட்டி ஒட்டப்பட்டுள்ளதாக கூறிய அப்பாவு, தவெக தலைவர் விஜய்-யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அதிமுகவினர் யார் அந்த சார் என்ற கேள்வியை தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர். அதேபோல் ஞானசேகரின் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் கூறி வருகின்றனர். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே விளக்கம் அளித்தார்.

ஞானசேகரின் என்பவர் திமுக அனுதாபி மட்டும் தான். அவர் கட்சியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு மேடை ஒன்றில் பேசிய போது, 3 ஐபிஎஸ் பெண் அதிகாரிகளை என் தம்பி ஞானசேகரின் வழக்கில் புலன் விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது என்று கூறினார். இந்த வீடியோ ட்ரெண்டாகியது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவரை "என் ஞானசேகரன்" என்று சபாநாயகர் அப்பாவு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலியில் 14,17 மற்றும் 19 வயதினருக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது சர்ச்சையான வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அப்பாவு, புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில், தம்பி ஞானசேகரன் என்று சாதாரணமாக பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார்.
"ஒரே ஒரு கற்பழிப்பு தான் செய்தார் "என் தம்பி" ஞானசேகர்,
— MR.Anil (@Saffron_Anil_) January 21, 2025
ஆனா அதுக்கு போய் மூன்று லேடிஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை போட்டு புலன் விசாரணை நடத்த சொல்லி இருக்கிறது உயர்நீதிமன்றம்". -அப்பாவு, சாபநாயகர்.
இப்போது அந்த "சார்" யார் னு தெரியுதா மக்களே???🧐 pic.twitter.com/XkAgKelUq6
அவரின் பெயரை கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாக மாற்றிவிட்டனர். இந்த வீடியோ வெட்டி ஒட்டி பயன்படுத்தி இருக்கின்றனர். முழு வீடியோவையும் பார்த்தால், அந்த விஷயத்தில் உண்மை புரியும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் பரந்தூரில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, பரந்தூர் விமான நிலையம் வேறு எங்கும் செயல்படுத்தப்படாது.
பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் விமான நிலையத் திட்டம் செயல்படுத்தப்படும். விஜய்-யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் கிடையாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும் நபர், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications