'மண் குதிரை'.. விஜய்யை அவரது முன்னாள் பிஆர்ஓ பிடி செல்வகுமார் கடுமையாக விமர்சிப்பதன் பின்னணி
திருநெல்வேலி: நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தவருமான பி.டி. செல்வகுமார், திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய்யால் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியாது என்றும், மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தவருமான பி.டி. செல்வகுமார், திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து பேசுகையில், "சுமார் 28 ஆண்டுகள் விஜயுடன் மேலாளராகப் பணியாற்றினேன். 'புலி' திரைப்படத்தின் வருமான வரிச் சோதனை மற்றும் உடல்நிலை சரியில்லாத காலங்களில், அவரிடமிருந்து ஆதரவோ, ஒரு தொலைபேசி அழைப்போ கூட வரவில்லை. இதனால், எதிர்காலத்திலும் விஜய் தன்னைக் கண்டுகொள்ளமாட்டார் என்று உணர்ந்ததாலேயே திமுகவில் இணைந்தேன்.

விஜய் மற்றும் மக்கள் இயக்கத்தின் நிர்வாகம் குறித்து விமர்சனம்
விஜய்யின் மக்கள் இயக்கம் சரியான நிர்வாகத்தைக் கொடுக்க முடியாது. நடிகர் விஜய், இன்னும் பக்குவப்பட வேண்டும், நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகிகளை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, விஜய்யின் இயக்கத்தில் இருக்கும் ஒருசில பொறுப்பாளர்கள் (புஸ்ஸி ஆனந்த்போன்றோர்) பணத்தைப் பெற்றுக்கொண்டு பதவிகளை வழங்குகிறார்கள். அவர்கள் விஜயை தவறாக வழிநடத்தி வருகிறார்கள்.
களத்தில் இறங்கினால் மட்டுமே தீர்வு
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை, பனியன் தொழிற்சாலைகள், கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள், தூத்துக்குடி போன்ற பகுதிகளின் சமூகப் பிரச்சனைகள் குறித்து விஜய் களம் இறங்கி நேரில் சென்று, கிராமங்கள் தோறும் மக்களுடைய பிரச்சனைகளைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, மக்கள் நலன் சார்ந்து ஒரு மாற்றத்தைக் விஜய்யால் கொண்டுவர முடியும்.. இல்லையேல் மக்கள் அவருக்குத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று பிடி செல்வகுமார் எச்சரித்தார்.
மண் குதிரை
மேலும், சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்குக்கூட தாமதமாகச் சென்றது (கரூர் சம்பவம்) ஏன் என்றும் கேள்வி எழுப்பிய பிடி செல்வகுமார், இது போன்ற செயல்கள் மூலம் அவரது ரசிகர்கள் தவறான பாதைக்குச் செல்வதாகவும், இதனால் அவரை "மண் குதிரை" என்று விமர்சிப்பதாகவும் தெரிவித்தார். விஜய்யின் மக்கள் இயக்கம் தொடர்ந்து தவறான அரசியலில் ஈடுபட்டால், அது புதுச்சேரியை விட்டுத் துரத்தப்பட்டதைப் போல தமிழகத்திலும் நடக்கும் என்றும் செல்வகுமார் ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications