ஆரியங்காவு வனப்பகுதியில் காட்டுத்தீ… வனத்துறை திணறல்
நெல்லை: தமிழக - கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியான ஆரியங்காவு வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீ மளமளவென அடர்ந்த விலையுயர்ந்த மரங்கள் நிரம்ப பெற்ற தேக்கு மரங்கள் உள்ள வனப்பகுதியில் வேகமாக பரவியது. வேகமாக பரவிய காட்டும் தீ தொடர்ந்து தரைப்பகுதியில் இருந்து மலை உச்சிவரை பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் கொழுந்து விட்டு, வேகமாக பரவி வருகிறது.

தற்போது வரை காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கேரள வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஆரியங்காவு தர்ப்பகுளம் பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு ஏராளமான அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகின. தற்போது தீ பற்றியுள்ள வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள், சிறுத்தை, காட்டுப்பன்றி,மிளா,உடும்பு உள்ளிட்ட பல்வேறு விதமான அரிய வகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன. காட்டுத் தீ காரணமாக வேறு இடங்களுக்கு விலங்குகள் சென்று இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

மேலும், அங்குள்ள விலங்கினங்கள், ஊர்வன வகைகள் தமிழக வனப்பகுதிக்குள் வரும் அபாயமும் உருவாகியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் சில சமூக விரோதிகள் மரங்களை வெட்டி கடத்துவதற்காக வனத்தை தீயிட்டு எரிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேரள வனப்பகுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை தீ பற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications