அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்சனை வரலாம்.. ஆனால்.. நயினார் நாகேந்திரன் கூறிய முக்கிய பாயிண்ட்.. என்ன?

அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணியில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதுபற்றி அக்கட்சியின் எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் வித்தியாசமான முறையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இருகட்சிகளும் சேர்ந்து செயல்பட்ட நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. அதன்பிறகு அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் சமீபகாலமாக அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக, அதிமுக தலைவர்கள் ஒருவருக்கொருவர் எதிர் கருத்து தெரிவித்து வருவதே இதற்கு சான்றாகும். இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த கூட்டணி தொடருமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை பேச்சு

இதற்கிடையே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், அணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது விவாதத்தை ஏற்படுத்தியது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என கூறினார். இதன்மூலம் அதிமுகவுடன் கூட்டணியாக செயல்பட அவர் விரும்பவில்லை என்ற தகவல்கள் வெளியாகின.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி விரும்பவில்லை

திராவிட கட்சிகளுடன் கூட்டணி விரும்பவில்லை

இதுபற்றி அண்ணாமலை, ‛‛கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை. தனித்து போட்டியிட விருப்பம் உள்ளது. பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்'' என பேசியதாக கூறப்படுகிறது. இதுதான் மீண்டும் பாஜக-அதிமுக இடையேயான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நயினார் நாகேந்திரன் விளக்கம்

நயினார் நாகேந்திரன் விளக்கம்

இந்நிலையில் தான் பாஜக, அதிமுக கூட்டணி குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் ரூ.30 லட்சத்தில் சமூதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக, அதிமுக இடையே பிரச்சனை இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அதுபற்றி விளக்கினார். இதுபற்றி நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

 அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக

அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக

தற்போது வரை அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தான் உள்ளது. இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சி. தமிழ்நாட்டில் அதிமுக மிகப்பெரிய கட்சி. அதிமுக- பாஜக கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. தலைமையில் எந்தவித மாற்றங்களும் இல்லை. கீழ்மட்டத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பிரச்சனை உள்ளது. பெரியகட்சி, பெரிய நிகழ்ச்சி எனும் போது சில நிகழ்வுகள் இருக்கதான் செய்யும்.

பிரச்சனைகள் கூட வரலாம்

பிரச்சனைகள் கூட வரலாம்

இது கூட்டணியை எந்தவிதத்தில் பாதிக்காது. பாஜக, அதிமுக கூட்டணி என்பது கொள்கை அடிப்படையிலான கூட்டணி. தேர்தல் அறிவிக்கும்போது அதில் பிரச்சனைகள் கூட வரலாம். இருப்பினும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவித்த பிறகு அனைவரும் சேர்ந்து பணி செய்வதில் எந்த கருத்துவேறுபாடும் இருக்காது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+