ஸ்கூல் லவ்.. வயக்காட்டிற்குள் கூட்டிப் போய்.. ச்சை.. வேறு வழக்கை விசாரிக்க போன போலீசுக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கல்லூரி மாணவன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே செல்வ மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 23 வயதாகும் இவர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

தனியார் கல்லூரியில் படித்து வந்த அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென மாயமானார். கல்லூரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

திருநெல்வேலி

திருநெல்வேலி

ராஜேந்திரனை காணவில்லை என்று அவரின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசிடம் வழக்கு பதியப்பட்டது. திசையன்விளை போலீசார் இது தொடர்பாக கடந்த 2 வாரமாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மாணவன் காணாமல் போன அன்று கல்லூரிக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் பரிசோதனை செய்தனர். ஆனால் இந்த சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கு உரிய சம்பவங்கள் எதுவும் இல்லை. கல்லூரிக்கு வந்த ராஜேந்திரன் மாலையில் கல்லூரி முடித்து எப்போதும் போல கிளம்பி சென்ற காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

வழக்கு

வழக்கு

இன்னொரு பக்கம் பைக் ஒன்றை எரித்த வழக்கில் 15 வயது சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் என்ன குற்றம் என்று சொல்லாமல் ஏன் இப்படி செய்தாய் என்று விசாரித்ததற்கு.. ராஜேந்திரனை நான் கொலை செய்யவில்லை என்று உளறி இருக்கிறார். ராஜேந்திரன் கொலையை பற்றி அந்த சிறுவனிடம் நாம் கேட்கவே இல்லையே. அந்த சிறுவன் ஏன் இதை பற்றி பேசுகிறான் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவனிடம் தீவிரமாக விசாரணை செய்துள்ளனர்.

கொலை

கொலை

இந்த விசாரணையில், ராஜேந்திரனை தானும் ஒரு கும்பலும் சேர்ந்துதான் கொலை செய்தோம் என்பதை ஒப்புக்கொண்டு உள்ளார். அந்த விசாரணையின் படி ராஜேந்திரன் அதே ஊரில் பள்ளி ஒன்றில் இருக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியும் இவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியை ஒருதலையாக இன்னொரு சிறுவன் காதலித்து வந்துள்ளார். அதே பள்ளியில் படிக்கும் அந்த சிறுவன் கஞ்சாவிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேந்திரன் தனது காதலியை மடக்கியதை விரும்பாத அந்த சிறுவன் ராஜேந்திரனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

தீர்த்துக்கட்ட முடிவு

தீர்த்துக்கட்ட முடிவு

இதையடுத்து ராஜேந்திரனை அழைத்து அந்த சிறுவனும் இன்னும் 2 சிறுவர்கள் தீவிரமாக பேசி உள்ளனர். பின்னர் காட்டு பகுதி ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கேயே கொலை செய்துள்ளனர். பஞ்சாயத்து பேசுவதாக சொல்லி அழைத்து சென்றுவிட்டு, காட்டுக்குள் வைத்து கொலை செய்துள்ளனர். நுங்கு வெட்டுவதற்காக அவர்கள் பயன்படுத்தும் அரிவாளை வைத்து வெட்டி உள்ளனர். அதன்பின் வேறு இடம் ஒன்றில் நடந்த வேறு மோதலில் இளைஞர் ஒருவரின் பைக்கிற்கு இவர்கள் தீ வைத்து உள்ளனர். இந்த வழக்கில்தான் சிறுவன் ஒருவனை அழைத்து போலீசார் விசாரித்த போது அவன் கொலை தொடர்பான அனைத்து விவரங்களை உளறி இருக்கிறான். இவர்கள் 3 பேரையும் இதையடுத்து போலீசார் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடி எடுத்தனர். கடந்த சில வருடங்களாக இவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்த நிலையில் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+