தென்காசி லட்சுமி வீட்டுக்குள் போன ஆபீசர்ஸ்.. ரயில்வே ஸ்டேஷன் கிட்ட தண்ணீரும் பாலாய் மாறின அதிசயம்

தென்காசியில் ரயில்வே ஸ்டேஷன் லட்சுமி வீட்டுக்குள் நுழைந்த ஆபீசர்ஸ்! தண்ணீரும் பாலாய் மாறிய அதிசயம்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 70க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. கெட்டுப்போன அசைவ உணவு சாப்பிட்டதில், ஃபுட் பாய்சன் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தும் விட்டனர். எனவேதான், மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. அப்படி சோதனை நடத்தும்போதுதான், லட்சுமி தம்பதியினர் சிக்கிவிட்டனர்.

தென்காசி ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள வீட்டில், கடந்த ஒரு வருடமாக நாள்தோறும் 1,000 லிட்டர் பால் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று அதிகாரிகளுக்கு கிடைத்திருக்கிறது..

Tenkasi Railway Station thirunelveli

தென்காசி ரயில்வே ஸ்டேஷன்

ஆனால், அந்த பாலில் ஏதோ கெமிக்கல் கலக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தென்காசி நகராட்சி மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முகமது, உடனடியாக சம்பந்தப்பட்டவர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்.

அப்போதுதான், ரசாயனத்தில் தயாராகும் பால் பண்ணையை, தம்பதி முப்பிடாதி 45, லட்சுமி, 40,, மற்றும் ரசாயன பவுடர் விற்பனை செய்த கோமதி சங்கர் நடத்தி வருவதும், இவர்கள்தான், பாலில் கெமிக்கலை கலப்பவர்கள் என்பதும் உறுதியானது..

300 லிட்டர் பால்

இதையடுத்து, 3 பேரையுமே போலீசார் கைது செய்தனர்.. அத்துடன் ரசாயனம் கலக்கப்பட்ட 300 லிட்டர் பாலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு பொதுமக்களின் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் பாலை, ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தென்காசியில் கெமிக்கல் கலக்கப்பட்ட பால் பறிமுதல் செய்யப்பட்டது திடீர் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பி வருகிறது.

பால் பண்ணை கோமதி சங்கர்

தென்காசி ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இந்த பால் பண்ணையை கீழப்பாவூரை சேர்ந்த கோமதி சங்கர் நடத்தி வந்திருக்கிறார்.. தென்காசியை சுற்றியுள்ள பல்வேறு டீக்கடைகளுக்கு இவர்தான் பால் சப்ளை செய்து வருகிறார்.

ஆனால், மிக மிக குறைந்த விலையில் டீக்கடைகளுக்கு பால் ஊற்றியிருக்கிறார்.. இதனால், பலரும், பல வருடமாகவே கோமதி சங்கரை நம்பி பால் வாங்கியிருக்கிறார்கள்.. பிறகுதான், அவரது மோசடி செயல் தெரியவந்தது, அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முகமதுக்கு தகவல் தந்துள்ளனர்.. போலீசாருடன் அதிகாரிகள் அந்த வீட்டிற்குள் சென்றபோது, மஞ்சள் கலரில் உள்ள கெமிக்கலை, நீரில் கலந்து பால் போல மாற்றியிருந்ததை கண்டு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்..

கடுமையான அதிர்ச்சி

வடமாநிலத்தில் இப்படியான மோசடிகள் நிறைய நடப்பதால், அங்கிருந்து கெமிக்கலை வாங்கிவந்து, தண்ணீரில் கலந்து பால் என்று, விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

இத்தனை காலமாக பால் என்று நினைத்து, தென்காசி பகுதி மக்கள், இந்த கெமிக்கலை குடித்து வந்துள்ளனர். இதனால் எந்த மாதிரியான உடல் பாதிப்புகள் வருமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். பாலில் கூட கலப்படம் செய்துள்ள இவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்து சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+