தூத்துக்குடிக்கு பிரசங்கத்துக்கு வந்த பெண்.. சீரழித்த திருநெல்வேலி ரயில்வே கார்டு, அரசு பஸ் டிரைவர்
நெல்லை: நெல்லை அருகே ரயில்வே கார்டு, அரசு பஸ் டிரைவர் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. பொறுப்பான வேலையில் இருந்துகொண்டு, இளம் பெண்ணிடம் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்ட இருவரது செயலும் நெல்லையை அதிர வைத்து வருகிறது.
நெல்லை மாவட்டம் மானூரை அடுத்துள்ளது வெங்கலபொட்டல் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சுபாஷ்.. 37 வயதான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ரயில்வே கார்டாக சுபாஷ் பணியாற்றி வருகிறார்...

ரயில் பணியில் கேரள மாநிலத்துக்கு சென்றுவரும்போது, 29 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண் புதுச்சேரியை சேர்ந்தவர்.. திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பிரசங்கத்தில் எப்போதுமே இந்த பெண் கலந்து கொள்வாராம். இதற்காக ரயிலில் வரும்போதுதான், சுபாஷூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருமே அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். அந்த பெண் ஏதாவது உதவி கேட்டால், சுபாஷும் செய்து தருவாராம்.
போதை: இந்நிலையில் சுபாஷ், தன்னுடைய குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பிவிட்டு, பார்ட்டி வைப்பதாக சொல்லி அப்பெண்ணை நெல்லைக்கு வரவழைத்தார்.. நெல்லையிலுள்ள பிரபல பாரில் 2 பேருமே மதுகுடித்துள்ளனர்.. பார்ட்டியை தடபுடலாக கொண்டாடியிருக்கிறார்கள்.. அந்த பெண்ணுக்கு போதை தலைக்கேறிவிட்டது.. அப்போது சுபாஷ் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அரசு பஸ் டிரைவரான தன்னுடைய நண்பர் 37 வயது முருகேசனையும் வீட்டுக்கு அழைத்து வந்து, அப்பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.. போதை தெளிந்து பார்த்தபோதுதான், சுபாஷ், முருகேசன் பிடியில் வசமாக சிக்கியிருப்பதை அந்த பெண் உணர்ந்தார்.. பிறகு அவர்களிடமிருந்து ஒருவழியாக தப்பி, உறவினர்கள் மூலம் நெல்லை மாநகர போலீசில் புகார் செய்தார்...
வழி தெரியவில்லை: ஆனால், இந்த பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதால், எந்த இடத்திற்கு சுபாஷ் தன்னை அழைத்து சென்றார் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.. தன்னை அழைத்து செல்லும் வழியில், தச்சநல்லூர் என்ற போர்டை பார்த்ததாக சொன்னார்.
இதனால் போலீசார், தச்சநல்லூர் பகுதிக்கே அந்த பெண்ணை அழைத்துச்சென்று சுற்றிக்காட்டினார்கள்.. சுபாஷுடன் சென்ற வழியை அடையாளம் காட்டுமாறு சொன்னார்கள்.. அப்போது அங்கிருந்த ஒரு போர்டை பார்த்து, அந்த வழியாகத்தான் சென்றதாக சொன்னார்.. இதையடுத்து, அந்த பகுதி மக்கள், சுற்றுவட்டாரத்தில் ரயில்வேயில் வேலை செய்வோர் என போலீசார் துரிதமான விசாரணையை மேற்கொண்டனர்..
அதிரடி கைது: இறுதியில் சுபாஷ் சிக்கினார். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் முருகேசனும் சிக்கினார்.. இறுதியில், நெல்லை தாலூகா மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து, ரயில்வே கார்டு சுபாஷ், அரசு பஸ் டிரைவர் முருகேசன் ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications