அப்பாவு மகனுக்கு பதவி.. திமுக நிர்வாகி ராஜினாமா.. நெல்லை செல்லும் ஸ்டாலினுக்கு சென்ற ஷாக் தகவல்
திருநெல்வேலி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நெல்லை செல்லவுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், அரசியல் ஆலோசனைகளில் ஸ்டாலின் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் விசிட்டிற்கு முன்னதாக நெல்லை மாவட்டத்தின் முக்கிய நிர்வாகி தன்னுடைய பதவியில் இருந்து விலகியிருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 20, 21 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரியவுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 20 ஆம் தேதி மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வரவுள்ளார். அங்கு அவருக்கு திமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். அங்கிருந்து ஸ்டாலின் கார் மூலம் நெல்லை செல்கிறார்.

ஸ்டாலின் நெல்லை விசிட்
அன்றைய தினம் மாலை தென்னிந்திய திருச்சபை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார். பிறகு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கவுள்ளார். 22 ஆம் தேதி காலை ரூ.56.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு அரசு பன்னோக்கு மருத்துவனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.
22 ஆம் தேதி மாலை அவர் விமானம் மூலம் சென்னை செல்லவுள்ளார். ஸ்டாலினின் நெல்லை விசிட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் முக்கியமாக ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் முதலமைச்சரின் திருநெல்வேலி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முக்கிய நிர்வாகி ராஜினாமா
ஸ்டாலின் வருகைக்கான ஏற்பாடுகளில் திமுக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் முக்கிய நிர்வாகி பதவி விலகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்தவர் ஏ.ஆர். ரகுமான். ராதாபுரம் தொகுதியில் பரபரப்பாக செயல்பட்டு வந்த ரகுமானின் விலகல் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதவியில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பாக ரகுமான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "திமுகவுக்காக கடுமையான உழைப்பை செலுத்தியிருக்கிறேன். நிறைய பணத்தையும் செலவு செய்துள்ளேன். சொந்த செலவில் கட்சி சார்பாக ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நான் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் கட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன்.
தொடர்ந்து புறக்கணிப்பு
மாவட்ட நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் என்னை புறக்கணித்து வருகிறார்கள். கட்சி நிகழ்வுகளில் என்னை ஒதுக்கி வருகிறார்கள். எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைப்பதில்லை. என் சொந்த ஊரில் நடைபெறும் நிகழ்வில் கூட என்னை அழைப்பதில்லை. எனது பணியை பார்த்து பல ஆயிர கணக்கானோர் என்னை பின் தொடர்கிறார்கள். தொடர்ந்து புறக்கணிப்பதால் வர்த்தக அணி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்." என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நெல்லை திமுக நிர்வாகிகள் கூறுகையில், "ரகுமான் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சமீபத்தில் மாவட்டத்தை இரண்டாக பிரித்தனர். புதிய மாவட்ட செயலாளராக கிரகாம்பெல் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு கிரகாம்பெல் வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். கிரகாம்பெல் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவரின் ஒன்றிய செயலாளர் பதவி தனக்கு வரும் என ரகுமான் எதிர்பார்த்தார்.
ஏமாற்றம்
ஆனால் ஒன்றிய செயலாளர் பதவி சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ்க்கு வழங்கப்பட்டது. கடைசிக்கு அலெக்ஸ் வகித்து வந்த மாணவரணி அமைப்பாளர் பதவியாவது தனக்கு வழங்கப்படும் என ரகுமான் எதிர்பார்த்தார். அந்தப் பதவியும் ரகுமானுக்கு வழங்கப்படாததால் அவர் தன் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார்." என்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications