எல்லாரும் சேர்ந்து.. மிளகாய் பொடிய தூவி வெட்டி கொன்னுட்டாங்க.! நெல்லை ஆணவ கொலை.. கவின் தந்தை வேதனை
திருநெல்வேலி: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தனது மகனை யார் அழைத்துச் சென்றது.. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து கவினின் தந்தை சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார். மேலும், இதில் சுர்ஜித்தின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை உள்ள கேடிசிஆர் பகுதியில் வசித்து வருபவர்கள் சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதி. இவர்கள் பட்டாலியன் போலீசில் சிறப்பு எஸ்ஐ ஆக உள்ளனர். இவர்களுக்கு சுர்ஜித் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். முன்னதாக இவர்கள் நெல்லையில் இருந்த போது, அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.

நெல்லை ஆணவக் கொலை
அப்போதே ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் என்பவருடன் நட்புடன் இருந்து வந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்த பிறகும் இருவரும் பழகி வந்துள்ளனர். கவின் குமார் சென்னையில் வேலை பார்த்து வந்தபோதிலும், விடுமுறைக்குச் செல்லும்போது அந்த பெண்ணை சந்தித்துப் பேசி வந்திருக்கிறார். இருப்பினும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த கவின் குமார், சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை கவினை அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசில் சரண்
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடிப்படையாக வைத்து விசாரணையைத் தொடங்கினர். சுர்ஜித்தை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், திடீரென அவரே போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
தந்தை வேதனை
இதற்கிடையே தனது மகன் கொல்லப்பட்டது குறித்து கவினின் தந்தை சந்திரசேகர் உருக்கமாக சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது மகன் படித்து முடித்து சென்னையில் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே 11ம் வகுப்பு முதலே நட்பு இருந்தது. அந்த பெண் எனது மகனைச் சந்திக்க வரும்படி கூறும்.
என்ன நடந்தது!
அந்த பெண்ணின் அம்மா, அப்பா, தம்பி எல்லாம் நைசாக பேசி வரச் சொல்லி இருக்கிறார்கள். சும்மா பேசுவோம், பேசி முடித்துவிடுவோம் வாங்க என்றே வரச் சொல்லியுள்ளனர். இதை நம்பியே எனது மகனும், மனைவியும் போய் உள்ளனர். எனது மனைவி உள்ளே சென்ற நிலையில், எனது மகன் வெளியே போன் பேசிக் கொண்டு இருந்தான்.
அப்போது அந்த பெண்ணின் தம்பி ஓரமாகக் கூட்டிச் சென்றுள்ளான். திடீரென கண்ணில் வத்தல் பொடியை வீசி, பிறகு வெட்டிவிட்டான். இதற்கு அவரின் அம்மா, அப்பா எல்லாம் உடந்தை தான். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அந்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பணிநீக்கம் செய்யும் வரை கவின் உடலை வாங்க மாட்டோம் எனச் சொல்லி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications