திருநெல்வேலி அதிசயக் கிணறு.. நொடிக்கு 2,831 கனஅடி தண்ணீர் மறைகிறது.. அறிவியல் பின்னணி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசயக் கிணறு, விநாடிக்குச் சுமார் 2,831 லிட்டர் (100 கன அடி) தண்ணீரை உள்வாங்கும் அபார திறன் கொண்டிருக்கிறது. அதனாலேயே இதனை 'அதிசயக் கிணறு' என அப்பகுதி மக்கள் அழைக்கிறநார்கள். எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் இந்தக் கிணறு நிரம்பாமல் உள்வாங்கிக் கொண்டே இருப்பதுதான் இதன் தனிச் சிறப்பு என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஏன் இப்படி இருக்கிறது.. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதையும் பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசயக் கிணறுக்கு கருமேனியாறு கால்வாயில் 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்குச் சுமார் 2,831 லிட்டர் வரும் நிலையில், அந்த தண்ணீரை அப்படியே கிணறு தற்போது உள்வாங்கி வருகிறது. கடந்த ஆண்டு பருவமழைக் காலங்களில், இந்தக் கிணற்றுக்குள் விநாடிக்கு 3,000 கன அடி (சுமார் 84,930 லிட்டர்) உபரி நீர் பல நாட்கள் திறந்து விடப்பட்டது. இவ்வளவு நீரை உள்வாங்கியும் கிணறு நிரம்பாமலேயே இருந்தது.

இந்த அதிசயக் கிணறு அதிகப்படியான நீரை உள்வாங்குவதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பெருகுகிறது என்பது ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிசயத்தின் அறிவியல் காரணங்கள்
இந்தக் கிணறு வெறும் அதிசயம் என்று மட்டும் கூறி ஒதுக்கிவிட முடியாது.. இதனை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் விரும்பியது. எனவே சென்னை ஐஐடி பேராசிரியர்களை வரவழைத்த அரசு, ஆய்வு செய்து காரணத்தை கூற வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து மூன்று மாதங்களாக இந்தக் கிணறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார்கள். டிரோன் கேமரா, கோப்ரா கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை பார்ப்போம்.
சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் வேதிவினை
திசையன் விளை அருகே உள்ளஆயன்குளம் பகுதியில் உள்ள கிணறுகளுக்கு அடியில் சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக உள்ளன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன், இந்தக் சுண்ணாம்புப் பாறைகளுடன் வேதிவினை புரிகிறது. இதன் விளைவாக, பாறைகளில் மெதுவாகச் சிறிய துவாரங்கள் உருவாகின்றன. இந்தத் துவாரங்கள் காலப்போக்கில் பெரிதாகி, பூமிக்கடியில் பெரிய குகைகளாக மாறியுள்ளன. இந்தக் குகைகள் தான் அதிக அளவு தண்ணீரைச் சேமித்து வைத்து, நிரப்பாமல் உள்வாங்கிக் கொள்ள உதவுகிறது.
நிலத்தடி நீர்க் கால்வாய் அமைப்பு
சில கிணறுகளுக்கு அடியில், பூமியில் இயற்கையான கால்வாய் போன்ற அமைப்பு உருவாகி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதேபோல் உபரி நீர் இந்தக் கால்வாய்கள் வழியாகத் தொடர்ந்து செல்லச் செல்ல, நீரோட்டத்தின் அழுத்தம் காரணமாக இந்தக் கால்வாய்கள் மேலும் விரிவான நீரோட்டம் செல்லும் பாதைகளாக மாறி உள்ளதையும் ஐஐடி பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 60 கன அடி நீரை உள்வாங்கி, நிலத்தடி நீர் மட்டங்களுக்கு விரைவாக அனுப்புவதாக பேராசிரியர்கள் கடந் ஆய்வில் கண்டறிந்தனர்.
நிலத்திற்கு அடியில் ஆறு
அதேநேரம் இந்தக் கிணறு பருவமழைக் காலத்திற்கு முன்னதாக வரண்டு காணப்பட்டது. ஆனால், 'டிட்வா' புயலின் காரணமாகப் பெய்த கன மழையால், இந்தக் கிணற்றில் நீரோட்டம் மீண்டும் தொடங்கி, அதன் உள்வாங்கும் திறன் வந்திருக்கிறது. எனவே, தற்போது கருமேனியாறு கால்வாயிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரை உள்வாங்கிக் கொள்கிறது. ஆயன்குளம் கிணறு என்பது சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த நிலத்திற்கு அடியில் உள்ள ஆறு போன்ற அமைப்பாக மாறி உள்ளது அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications