Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை! 10 நாளில் 2வது முறையாக நெல்லை போக்சோ கோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி சுரேஷ்குமார் இந்த வழக்கில் கடுமையான தீர்ப்பை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மரம் வெட்டும் தொழிலாளியாக வசிக்கும் ஒருவர், தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயது மகளை 2024ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

crime tirunelveli

சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வள்ளியூர் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், குற்றவாளியின் டிஎன்ஏவும், கருவில் உருவான குழந்தையின் டிஎன்ஏவும் தடயவியல் ஆய்வில் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது. இந்த அழுத்தமான ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இன்று அளித்த தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்: "குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும், அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர். சொந்த மகளையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இந்த நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது."

இதே திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம், கடந்த 11 நாட்களுக்கு முன்பு, தனது சொந்த மகளை கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, இதுபோன்ற ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த மாதம் நடந்த சம்பவம்: நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் 49 வயதான கூலித் தொழிலாளி. இவருக்கு மதுவுக்கு அடிமையானவர் என தெரிகிறது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி 8ஆம் வகுப்பு படித்த போது நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினாராம்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அந்த சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை தாய், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் தந்தையே அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்ததை அடுத்து அவரது தாய் புகார் அளித்தார். அதை அடுத்து சிறுமியின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு குறை மாதத்தில் பிறந்த குழந்தை, அடுத்த நாளே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+