அவசரப்பட்ட தவெக நிர்வாகி.. விஜய் முதல்வராகவில்லையே என தீக்குளித்தவர் இறந்தார்.. சோக பின்னணி
திருநெல்வேலி: விஜய் முதல்வராக தாமதமானதால் மனம் உடைந்த 47 வயது தவெக நிர்வாகி கடந்த 9ம் தேதி தீக்குளித்தார். இதில தீக்காயமடைந்த அவர் நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளம் அருகே உள்ள புதுமனை கிராமத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 47). இவர் தவெக கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் புதுமனை கிராமத்தின் தவெக கிளை செயலாளராக இருந்து வந்தார்.

விஜய் எப்படியாவது தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நேர்த்திக்கடனாக உடலில் 16 அடி நீள வேல் குத்தி வேண்டுதல் செய்தார். இதன்மூலம் அவர் பிரபலமும் ஆனார்.
இந்நிலையில் தான், சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் கூட விஜய்யால் முதல்வராக முடியவில்லை. மெஜாரிட்டி கிடைக்காததால் அவர் முதல்வராக முடியாமல் இருந்தது. பிற கட்சிகளின் ஆதரவை கோிரனார். இதனால் கடந்த 4ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியானாலும் கூட நேற்று முன்தினம் தான் மெஜாரிட்டி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றார்.
ஆனால் முன்னதாகவே விஜய் முதல்வராக முடியவில்லை என்று இசக்கியப்பன் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் தான் கடந்த 9ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மகாராஜபுரம் அருகே இசக்கியப்பன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதை பார்த்தவர்கள் அவரது உடலில் பிடித்த தீயை அணைத்து மீட்டனர். இருப்பினும் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இறந்துள்ளார்.
இதுபற்றி பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி!












Click it and Unblock the Notifications