வள்ளியூர் ரோட்டில்.. யாருங்க அது "ஒய்யாரமாய்"? காருக்குள்ளே எட்டிப் பார்த்தால்.. வெலவெலத்த நெல்லை
நெல்லை: திடீரென கார் நின்றுவிடவும், வள்ளியூர் ரோடே கொஞ்ச நேரத்தில் திணறிவிட்டது.. அதுவும் கார் ஓனர் பழனி வெலவெலத்து போயிட்டார்.. என்ன நடந்தது நெல்லையில்?
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி.. இவர் டாடா டியாகோ கார் ஒன்றை வைத்திருக்கிறார்.. வழக்கமாக அந்த காரில்தான் வெளியில் கிளம்பி செல்வாராம்.

பழனி: ஆனால், கடந்த சில நாட்களாகவே, கார் அடிக்கடி ரிப்பேர் ஆகி கொண்டேயிருந்ததாம்.. எத்தனையோ முறை நடுவழியிலேயே, ஸ்டார்ட் ஆகாமல் கார் நின்றுவிடுமாம். அதனால், காரை கொண்டுபோய், சர்வீஸ் சென்டரில் விட முடிவு செய்தார் பழனி.
அதன்படியே, தெற்கு வள்ளியூரில் உள்ள டெரிக் டாட்டா கார்ஷோரூமிற்கு, காரை கொண்டுவந்து விட்டுள்ளார்.. அங்கிருந்த ஊழியர்கள், வழக்கம்போல் சர்வீஸ் செய்வதற்காக, கார் பானெட்டை திறந்துள்ளனர். அப்போது, புஸ்ஸென்று தலையை நீட்டிக் கொண்டு, ஒரு பாம்பு இருந்ததும்.. இதைப்பார்த்து மொத்த ஊழியர்களும் அலறி அடித்து கொண்டு ஓடிவிட்டார்கள்.
பாம்பு: உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து காரின் உள்ளே பார்த்தனர். அது ஒரு மலைப்பாம்பு.. அவ்வளவு பெரிய பாம்பு காருக்குள் எப்படி வந்தது என்றே தெரியவில்லையாம்.

மிகப்பெரிய மலைப்பாம்பு என்பதால், அதை உடனடியாக வெளியே எடுக்க முடியவில்லை.. நீண்ட நேரம் போராடித்தான், அந்த பாம்பை பத்திரமாக பானெட்டில் இருந்து வெளியே எடுத்தனர்.. ராக் பைத்தான் என்ற மலைப்பாம்பு வகையை சார்ந்தது என்கிறார்கள்.. இறுதியில் இந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும், அவர்கள் அதை கொண்டுபோய் பத்திரமாக காட்டில் விட்டுவிட்டனர்.
கார் ஓனர் பழனியின் வீடு, இத்தனைக்கும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில்தான் உள்ளதாம்.. அப்படியிருந்தும், மலைப்பாம்பு எப்படி அங்கே வந்தது? என்ற சந்தேகம் எழுந்தது.. பிறகு இதுகுறித்து போலீசார் பழனியிடம் விசாரித்தனர்.
பாபநாசம்: சில நாட்களுக்கு முன்பு, பாபநாசம் பகுதிக்கு காரை எடுத்துக் கொண்டு போனாராம் பழனி.. அந்த இடத்தில் எங்காவது மலைப்பாம்பு வந்து, காருக்குள் பதுங்கி இருக்கலாம் என்கிறார்கள்.. இருந்தாலும், இத்தனை நாளும் காருக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, நடுவழியில் காரையும் மக்கர் செய்து, வள்ளியூரையே வெலவெலக்க செய்துவிட்டது, அந்த பைத்தான்..!!!












Click it and Unblock the Notifications