சிகரெட்டால் சூடு.. திருநெல்வேலி வாட்டர் பாட்டில் கம்பெனியில் யாரந்த பெண்? அசிங்கப்பட்ட நெல்லை விஐபி
திருநெல்வேலி: நெல்லையில் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக பிரமுகரின் மகனை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் முகமது மீரான். இவர் அதிமுக நெல்லை சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.. நெல்லை டவுன், பாறையடி உள்ளிட்ட 3 இடங்களில் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யும் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.

தண்ணீர் பாட்டில்: இவரது மகன் பெயர் முகம்மது சர்ஜின்.. 30 வயதாகிறது.. தண்ணீர் கம்பெனிகளின் ஒட்டுமொத்த நிர்வாக வேலைகளை கவனித்து வருகிறார்.. 3 கம்பெனிகளிலும் பொறுப்பு உள்ளதால், 3 கம்பெனிகளுக்குமே இவர் சென்று வருவார்.
அந்தவகையில், நெல்லை டவுன், பாறையடியில் செயல்பட்டுவரும் ஒரு தண்ணீர் கம்பெனியில் 35 வயதான பெண் ஒருவர் வேலைபார்த்து வருகிறார்.. இந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது.. இவரிடம், தவறான நோக்கத்தில் சர்ஜின் அணுகியிருப்பதாக தெரிகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து கம்பெனி ஓனர், முகமது மீரானிடம் முறையிட்டிருக்கிறார்.. இதற்கு மீரானும், தன்னுடைய மகன் சர்ஜினை கண்டித்ததாக தெரிகிறது.
பலத்த காயம்: இதனால் அந்த பெண்ணின்மீது ஆத்திரமடைந்த சர்ஜின், பாறையடியில் உள்ள கம்பெனிக்கு அந்த பெண்ணை வரவழைத்து தாக்கி, காயப்படுத்தி, பாலியல் பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையிலுள்ள அந்த பெண்ணிடம், நெல்லை போலீசார் நேரடியாகவே சென்று, நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது அந்த பெண், சர்ஜின் தன்னைசிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் தந்துள்ளார்..
தீண்டாமை வன்கொடுமை : இதுகுறித்து நெல்லை டவுன் மகளிர் போலீசார், பிஎன்எஸ் 68ன் கீழும் (அரசு அல்லது தனியார் அமைப்புகளில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்), தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து அதிமுக பிரமுகரின் மகனான முகமது சர்ஜினை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் சொல்லும்போது, "முகமது மீரான் நடத்தி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். அவருக்கு தாழையூத்து மற்றும் திருநெல்வேலி டவுன் ஆகிய இடங்களில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. முகமது சர்ஜின் அடிக்கடி சுத்திகரிப்பு ஆலைக்கு வருவார். அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது குறித்து மீரானுக்கு தெரியவந்தது. இதற்காக மகனை முகமது மீரான் கண்டித்தார்.
சிகரெட் சூடு: அதை நான் தான் அவரது அப்பாவிடம் சொன்னதாக நினைத்துக் கொண்டு, என்னை தாக்கி கொடுமைப்படுத்த திட்டமிட்டார். கடந்த, 13ம் தேதி இரவு, வேலையிருப்பதாக சொல்லி, என்னை டவுன் சுத்திகரிப்பு ஆலைக்கு பைக்கில் அழைத்துச் சென்றார். அங்கு போனதுமே கதவை அடைத்து, என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். சிகரெட்டால் சூடு வைத்தார்.
"ஏன் என்னை பற்றி, என் அப்பாவிடம் சொன்னாய்?" என்று கேட்டு என்னை தாக்கினார். மிகவும் காயம்பட்ட நிலையில், எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் முதலில் புகார் கூற முடியவில்லை" என்று கூறினார்.
பரபரப்பு: இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சர்ஜின், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, உடலில் பல்வேறு இடங்களில் சிகரெட் சூடு வைத்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து வெளிநாடுகளிலுள்ள நண்பர்களுக்கும் ஷேர் செய்ததாக சொல்கிறார்கள்.. முக்கிய பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டிருப்பது நெல்லை அதிமுகவில் பரபரப்பை தந்து வருகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications