பா.ஜ.க நிர்வாகியை தி.மு.க எம்.பி ஞானதிரவியம் தாக்கியதாக புகார்.. அண்ணாமலை கடும் கண்டனம்!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காவல்கிணறு விலக்கில் ஹோட்டல் ஓன்றில் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் என்பவர் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் ஆதரவாளர்கள் வந்தனர்.
ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரனை தாக்கியதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுகின்றனர். ஹோட்டலில் இருந்த கேமராக்களையும் அவர்கள் அடித்து உடைத்து சென்று விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன்
இதில் காயம் அடைந்த பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க நிர்வாகி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அண்ணாமலை கடும் கண்டனம்
பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் மீது தி.மு.க எம்.பி ஞானதிரவியம் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. தி.மு.க எம்.பி.க்களின் அராஜகம் தமிழக்தில் தலைவிரித்தாடுகிறது. கடலூர் திமுக எம்.பி ரமேஷ் என்பவர் மீது இப்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்திய ஞானதிரவியம் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்து காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கேட்டுக் கொள்கிறேன்.

ஆபத்தை விளைவிக்கும்
அரசியல் அதிகாரம் என்பது நிலையில்லாதது. பிரியாணி கடை முதல் டீக்கடை வரை திமுகவின் அராஜகத்தை ரவுடியிசத்தை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறை கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஆளும் கடசியாக வந்த பிறகும் இந்த பழக்கத்தை தொடருகிறார்கள். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே இதுபோன்ற வன்முறை கலாசாரத்தை கையில் எடுப்பது தமிழத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும் என்பது உறுதி.

பொன் ராதாகிருஷ்ணன்
ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்று காவல்துறைக்கு தெரிவித்துகொள்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications