அரசு பஸ் தான் ஒரே வழி.. மாணவர்கள் ஓடிவந்தும் இரக்கம் இல்லாமல் விரட்டிய டிரைவர் கண்டக்டர்.. வீடியோ
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி முன்பு அரசு பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் பள்ளி முன்பு காத்திருந்த மாணவர்கள் ஓடிச்சென்று ஏற முயன்று காயமடைந்தனர். இந்த வீடியோ சமூகஊடங்களில் வெளியான நிலையில், டிரைவர் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வேண்டுமானால் வசதி படைத்த மாணவர்களுக்காக தனியார் பள்ளிகள், அவர்களை வீட்டிலேயே அழைத்து செல்ல வேன்கள், ஆட்டோக்கள் பேருந்துகள் இருக்கலாம். ஆனால் ஏழை மக்களுக்கு அரசு பள்ளிகளும் அரசு பேருந்துகள் தான் ஒரு வழியாக உள்ளது.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த போக்குவரத்து என்றால் அரசு பேருந்துகள் தான். பஸ் பாஸ் வசதி கொடுத்த காரணத்தால் தான், பல குழந்தைகள் படிக்க அன்று முதல் இன்று வரை வெளியூர்களுக்கு வந்து செல்கிறார்கள். பஸ் பாஸ் வசதி காரணமாக பலரும் இன்று பட்டம் பெற்று உயர் வேலைகளுக்கு சென்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
அரசு பேருந்துகளில் நடக்கும் சில கொடுமைகள் பல ஆண்டுகளாக தொடர்வது உண்மையில் சாபக்கேடு தான். அந்த காலக்கட்டத்தில் அரசு பேருந்துக்காக ஒரு மணி நேரம் வரை பள்ளி முடிந்து காத்திருந்து ஏறி செல்வார்கள். அந்த ஊருக்கே ஒரு பேருந்து தான் இருக்கும். ஆனால் அப்போது பேருந்துகளை சில ஓட்டுநர்கள் நிறுத்தாமல் சென்றுவிடுவார்கள். இதேபோல் பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு வந்து செல்ல வேண்டும் என்று இருக்கும். ஆனால் அந்த பேருந்துகள் சில நேரங்களில் காலை வேளைகளில் மெயின் ரோட்டிலேயே ஊர்களுக்குள் வராமல் சென்றுவிடுவார்கள். இப்படி பல நாட்கள் மாணவர்கள் அரசு பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டு தான் படித்தார்கள். அரசு எவ்வளவு சொன்னாலும் பேருந்து ஓட்டுநர்கள் சிலர் மாணவர்களை ஏற்றி செல்ல மனம் இல்லாமல் இப்படி செய்வார்கள்.
அது போன்ற சம்பவங்கள் இன்றும் தமிழ்நாட்டின் பல ஊர்களில் தொடர்கிறது. கடந்த அக்டோபர் 31ம் தேதி திருநெல்வேலி நகரத்தில் இருந்து முக்கூடல் நாக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆனால் அங்ககுள்ள அரசு உதவி பெறும் பள்ளி முன்பு அரசு பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் பள்ளி முன்பு காத்திருந்த மாணவர்கள் ஓடிச்சென்று ஏற முயன்றார்கள்.
ஆனாலும் ஓட்டுநர் பேருந்தினை நிறுத்தாமல் சென்று கொண்டே இருந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. திருநெல்வேலி பகுதியில் இது முதல்முறையல்ல, இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் குறிப்பிட்ட அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications