எரிந்த நிலையில் கிடைத்த டார்ச் லைட்.. மர்மமாக உயிரிழந்த ஜெயக்குமார் கடைசியாக வாங்கியது இதுதானா?
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், அவர் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் 4 பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக தெரியவந்தது.

ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இறந்த நிலையில் கிடந்த அவரது உடலின் உறுப்புகள் உடற்கூராய்வில் மிகவும் கவனமாக ஆராயப்பட்டது.
இறந்து கிடந்த ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலுமாக எரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இறந்தவரின் உடலை எரித்தால் தான் குரல்வளை முற்றிலும் எரியும் என்பதால் கொன்றுவிட்டு, எரித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடய அறிவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த பகுதி முழுவதும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் மீண்டும் தோட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து டார்ச் லைட் மீட்கப்பட்டுள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்கப்பட்ட நிலையில் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் இதுதானா என விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய சிசிடிவி காட்சிகள் 3 நாட்களுக்கு முன்பு வெளியானது. ஜெயக்குமார் எந்த பதற்றமும் இன்றி டார்ச் லைட் வாங்கிச் சென்றதாக கடை உரிமையாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications