மோதியதால் கார் பேனட்டில் படுத்த இளைஞர்.. 200 மீட்டர் இழுத்துச்சென்ற நெல்லை சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்!
நெல்லை: நெல்லை அருகே பைக் ஓட்டுநரை கார் பேனட்டில் இழுத்துச் சென்ற போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பைக்கில் எஸ்.ஐ ஓட்டி வந்த கார் மோதிய நிலையில் நீதி கேட்டு அவர் காரின் பேனட்டில் படுத்துள்ளார். அவரை சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார் எஸ்.எஸ்.ஐ காந்திராஜன்.
நெல்லை டவுன் கணேஷ் தியேட்டர் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பைக் சேதமடைந்தது. இந்த நிலையில், பைக் ஓட்டுநர் தனது பைக் மீது மோதிய காரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காரை ஓட்டி வந்தது போக்குவரத்து காவல் பிரிவு எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கும், பைக் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பைக் உரிமையாளர், முன்னால் சென்ற பேருந்து திடீரென நின்றதால் நானும் பைக்கை நிறுத்தினேன், காரை கொண்டு பைக் மீது மோதியதால் தான் பைக் சேதமானது என முறையிட்டார். இதற்கிடையே அங்கு பொதுமக்கள் கூடியதால், எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் தனது காரை எடுக்க முயற்சித்தார். ஆனால் காரை எடுக்கவிடாமல் பைக் உரிமையாளர் தனக்கு நியாயம் வேண்டும் என கார் பேனட் முன்பு ஏறி படுத்துக்கொண்டு காரை தடுத்து நிறுத்த முயன்றார்.
எஸ்.ஐ காரின் வேகத்தை அதிகரித்து, பேனட் மீது படுத்திருந்த நபருடன் சுமார் 200 மீ தூரம் காரை ஓட்டி சென்றார். கார் பேனட் மீது படுத்த நபர் "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க".. என கூச்சலிட்டவாறே காரின் முன்பக்கம் தொங்கிக் கொண்டே பயணித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் நெல்லை மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து இருசக்கர வாகன ஓட்டியிடம் மோசமான செயலில் ஈடுபட்டதாக போக்குவரத்து பிரிவு எஸ்.எஸ்.ஐ காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அவர் நெல்லை மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து எஸ்.ஐ காந்தி ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பைக்கை ஓட்டி வந்தவர் பெயர் அசோக் குமார் என்றும், அவர் டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்துள்ளது. எஸ்.எஸ்.ஐ காந்தி ராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பைக் ஓட்டுநரிடம் இருந்து புகார் பெற போலீசார் முயற்சி எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications