19 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்த திருநங்கை மீது கடும் தாக்குதல்.. எஸ்பியிடம் புகார்!
நெல்லை: நெல்லை மாவட்டம், இளைஞரை திருமணம் செய்த திருநங்கையரை அடித்து உதைத்த இளைஞரின் குடும்பத்தினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள சாத்தான்குளம் கரையடி காலனியைச் சேர்ந்தவர் திருநங்கையர் உதயா (28). இவர் தற்போது பழவூரில் வசித்து வருகிறார். இவரும் கூடன்குளம் ஸ்ரீரங்கநாராயண புரத்தை சேர்ந்த பால ஆனந்த் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்பு அது காதலாக மாறியது. இதனால் ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி பால ஆனந்த், உதயாவை தேடி பழவூர் வந்துள்ளார்.

இருவர்
இதனையறிந்த பால ஆனந்தின் அப்பா பாலமுருகன், தம்பி சுபாஷ் மற்றும் உறவினர்கள் மணிகண்டன், சக்திவேல் மற்றும் சிலர் காரில் வந்து பழவூரில் இருந்த மகன் பால ஆனந்த் மற்றும் உதயா ஆகிய இருவரையும் காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

நாகர்கோவில் அரசு மருத்துவமனை
பின்பு உதயாவை கூடன்குளம் காவல் நிலையத்தில் விட்டு விட்டு மகன் பால ஆனந்தை அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயாவை , பால ஆனந்த் உறவினர்கள் அடித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் தன்னை அடித்ததாக கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

எந்த பிரிவுகளின் கீழ் வழக்கு
அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உதயாவிற்கு இடது கண்ணுக்கு கீழே வீக்கம் ஏற்பட்டு காயம் உள்ளது. இது குறித்து உதயா பழவூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனால் பால ஆனந்த், பாலமுருகன், லெட்சுமி, , சக்திவேல், மணிகண்டன், ஆகியோர்கள் மீது 74/22 U/s 147,294(b), 323,355,506 (i) IPC பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

5 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை
மேலும் பழவூர் போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் 5 நாட்களாகியும் பழவூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும், தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருநங்கைகள் மனு அளித்தனர்.












Click it and Unblock the Notifications