தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி.. பைக் மீது மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி! நெல்லையில் சோகம்
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சி அருகே உள்ள கரந்தை என்ற ஊரை சேர்ந்தவர் மாடசாமி. கட்டிட தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (வயது 50) என்ற மனைவியும் இசக்கி ராஜ்(வயது 30) என்ற மகனும் உள்ளனர். இசக்கி ராஜ் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர்களது உறவினர் குழந்தை ஒன்றிற்கு காதணி அணியும் விழா காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெற்றது.

இதற்காக இசக்கிராஜ் தனது தாயார் சரஸ்வதி மற்றும் தங்கை கார்த்திகா இவருடைய மகன் சந்துரு ஆகியோரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு காரையாறுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது விக்ரமசிங்க புரத்தில் இருந்து அம்பை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி கோடாரங்குளம் விலக்கு அருகே வந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தாறுமாறாக தறிகெட்டு ஓடிய லாரி, இசக்கிராஜ் வந்து கொண்டு இருந்த பைக் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பைக் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில், பைக்கில் வந்த சரஸ்வதி, கார்த்திகா, குழந்தை சந்துரு ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இசக்கி ராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த இசக்கிராஜை மீட்டு அம்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனளிக்காமல் இசக்கிராஜும் பலியானார். இந்த விபத்தையடுத்து லாரி டிரைவர் அசோக் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் பலியானவர்களின் நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தில் பலியான இசக்கிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களின் கண்ணீரையும் குளமாக்கியது. விபத்தில் பலியான இசக்கிராஜ்-க்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்ததாம். அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், இசக்கி ராஜ் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications