அள்ள அள்ள 4 சிக்ஸர்.. வந்தே பாரத் வருது.. நெல்லை டூ சென்னைக்கு எப்ப தெரியுமா? நினைச்சதைவிட படுஸ்பீடு
நெல்லை: நெல்லைக்கு விரைவில் வந்தே பாரத் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால், திருநெல்வேலி மக்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
ரயில் பெட்டிகள்: வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..

அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளதால், பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்று வருகின்றன.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.
வசதிகள்: அடுத்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு வெகுவிரைவில் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தெற்கு ரயில்வே திருநெல்வேலி - சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.. காரணம், சென்னை - நெல்லை ரயிலை இயக்கும்போது, அதிக வருமானத்தை ஈட்டித்தரும் என்பதுடன், தென் மாவட்ட மக்களுக்கும் கூடுதல் ரயில் சேவையாகவும், பகல் நேர ரயில் சேவையாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மாவட்டம்: சமீபத்தில், நெல்லை - சென்னை வந்தே பாரத் குறித்து, தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சொல்லும்போது, "சென்னையில் இருந்து நெல்லைக்கு முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. அதன் மூலம் தென் மாவட்டங்களில் இருந்து மிக விரைவில் சென்னையை சென்றடைய முடியும்.
ஆனால், திண்டுக்கல் - மதுரை - நெல்லை இடையிலான தண்டவாளத்தை 1330 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும்.
அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி, ஆகஸ்ட் மாதம் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
நெல்லை பராமரிப்பு: இந்த அறிவிப்பு வெளியானபோதே, வந்தே பாரத் ரயிலை நெல்லையில் பராமரிக்க, நெல்லை சந்திப்பில் உள்ள பிட் லைன் எனப்படும் பராமரிப்பு தண்டவாள பகுதி மேம்படுத்தும் பணியும், அந்த கோச்சுகளுக்கு சார்ஜ் ஏற்றுக்கொண்டு பராமரிக்கும் வகையில் மேல் பகுதியில் மின்சார பாதை அமைக்கும் பணியும் ஆரம்பமானது...
அதுமட்டுமல்ல, இப்போதைக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில், வெறும் 5 பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளதால், 6வதாக உள்ள ரயில்வே பிளாட்பாரம் சரக்கு இறங்குதல தண்டவாளமாக செயல்பட்டு வருகிறது.. அதனை ஆறாவது பிளாட்பாரமாக மேம்படுத்தும் பணியும் வேகம் எடுத்தது. இப்படி நாலாபக்கமும் பராமரிப்பு பணிகள் துரிதமாக கையில் எடுக்கப்பட்டதால், எப்படியும், இந்த ஜூலை மாதம் பணிகள் முடிந்து, அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கிவிடும் என்று நம்பப்பட்டது.
4 வந்தே பாரத்: ஆனால், தற்போது ரெயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஜூலை மாதத்தின் கடைசி வாரத்திலேயே, 4 வந்தே பாரத் ரெயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது டெல்லி-சண்டிகருக்கும் (243 கிலோ மீட்டர் தூரம்), சென்னையில் இருந்து 622 கிலோமீட்டர் தூரம் கொண்ட நெல்லைக்கும், குவாலியரில் இருந்து 432 கிலோ மீட்டர் தூரத்தில் போபாலுக்கும், லக்னோவில் இருந்து பிரயாக்ராஜ்க்கும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வந்தது அறிவிப்பு: நெல்லைக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் இந்த மாதமே இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதால், தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும்.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications