5 தொகுதிகளில் ஆதிக்கம்.. நெல்லையை அதிர வைத்த தவெக.. திமுக, அதிமுகவுக்கு பின்னடைவு!
நெல்லை: நெல்லை தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். திமுக, அதிமுக வேட்பாளர்களை விடவும் 988 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.எஸ்.முருகன் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இம்முறை தபால் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அரசு ஊழியர்கள் திமுக ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனால் தபால் வாக்குகள் பெரியளவில் பிரியும் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 14 தொகுதிகளிலும், தவெக 11 தொகுதிகளிலும், அதிமுக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தபால் வாக்குகளில் முன்னிலையை பெற்றுள்ளார்.
அதேபோல் நெல்லை தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன் தொடக்கம் முதலே தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கிறார். திமுக தரப்பில் சு.சுப்பிரமணியனும், அதிமுக தரப்பில் கணேசராஜா போட்டியிட்டனர். தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் முன்னிலையில் இருக்கிறார்.
முதல் சுற்று முடிவில் 988 வாக்குகள் வித்தியாசம் பெற்று தவெக வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளார். நெல்லை தொகுதி மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் இருக்கிறது. சென்னையை போன்றே நெல்லையிலும் தவெக ஆதிக்கம் செலுத்தி வருவது பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்












Click it and Unblock the Notifications