தென்காசி ஆரோக்கிய செல்வி.. படுக்கையில் காதல் கணவனுக்கு.. 108க்கு போன் போட்டதால் சிக்கியது எப்படி?
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் கடந்த ஐந்தாம் தேதி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்துவிட்டதாக அவரது மனைவி மரிய ஆரோக்கிய செல்வி கூறினார். இதை உண்மை என்று நம்பி ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு உறவினர்கள் அனுப்பினார்கள். அங்கு தான் ஆரோக்கிய செல்வியின் நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளது. என்ன நடந்தது..
தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான 35 வயதாகும் முத்துக்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி மரிய ஆரோக்கிய செல்விக்கு 30 வயதுஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

தினசரி அந்த பகுதியில் கிடைக்கும் கூலி வேலைக்கு முத்துக்குமார் சென்று வந்துள்ளார். அவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். கடந்த 5-ந் தேதி வீட்டில் வைத்து முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்து விட்டதாக ஆரோக்கிய செல்வி அக்கம்பக்கத்தில் கூறியிருக்கிறார். இதையடுத்து பதறிப்போன அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை அங்கு வரவழைத்தனர்.
அங்கு வந்த ஆம்புலன்ஸ் செவிலியர்கள், முத்துக்குமாரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். எனினும் மஞ்சள் காமலைக்கு உண்டான அறிகுறி எதுவும் தெரியவில்லை என கூறப்படுகிறது.இதனால் அவர்களுக்கு முத்துக்குமார் சாவில் சந்தேகம் இருந்துள்ளதாம்.இதையடுத்து சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு இதுபற்றி அவர்கள் தகவல் கூறினார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் முத்துக்குமாரின் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம் இதுதொடர்பாக அறிக்கையை டாக்டர்கள், தயார் செய்து வந்தனர். இந்த சம்பவத்தால் சந்தேகம் அடைந்த போலீசார், முத்துக்குமாரின் மனைவி மரிய ஆரோக்கிய செல்வியை பிடித்து விசாரிக்க முயன்றனர்.
இதனை அறிந்த அவர், தனது 12 வயது மகனுடன் சேர்ந்து கணவர் முத்துக்குமாரை கொலை செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் மூலம் சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது, மரிய ஆரோக்கிய செல்வி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தாராம். இதுபற்றி போலீசார் கூறிய தகவலின் படி, மரிய ஆரோக்கிய செல்வியும், முத்துக்குமாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாம். காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். முத்துக்குமார் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்தார். அதன் மூலம் குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். ஆனால் பல நாட்கள் முத்துக்குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியையும், குழந்தைகளையும் அடித்து உதைத்து வந்தாராம்.
கடந்த 5-ந் தேதி சிவக்குமார் அளவுக்கு அதிகமாக மதுஅருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்து படுத்துகிடந்தாராம். அப்போது மரிய ஆரோக்கிய செல்வி தனது மகனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டாராம். அதன்படி போதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது முத்துக்குமாரை மரிய ஆரோக்கிய செல்வி கழுத்தை நெரித்தாராம். அப்போது பெற்ற மகனை தலையணையை வைத்து முகத்தில் அழுத்த வைத்தாராம். இதில் முத்துக்குமார் மயங்கி விட்டாராம். அதன் பின்னர் மரிய ஆரோக்கிய செல்வி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலை நோயால் தன்னுடைய கணவர் மயங்கிவிட்டார் எனக்கூறி நாடகமாடினாராம்.
பின்ன 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வர செய்தாராம். ஆம்புலன்சில் வந்தவர்கள், மரிய ஆரோக்கிய செல்வியின் கணவர் முத்துக்குமார் இறந்து 2 மணி நேரம் ஆகிவிட்டது என அங்கேயே கூறியிருக்கிறார்கள்.. அதன் பின்னர் சிறிது நேரத்தில் போலீசார் மரிய ஆரோக்கிய செல்வியின் வீட்டுக்கு வந்து அவரது கணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என தெரிய வந்துவிடும் என்பதை அறிந்து கொண்டதால் மரிய ஆரோக்கிய செல்வி தனது மகனுடன் சரண் அடைந்தாராம். இந்த தகவலை மரிய ஆரோக்கிய செல்வி போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தாராம். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications