திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்பிய போகஸ்.. என்னாச்சு? "சர்க்யூட் ஹவுசில்" கேள்வி கேட்ட ஸ்டாலின்.. இரவோடு இரவாக என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: முதல்வர் ஸ்டாலினின் இந்த தென்னக பயணம்தான் திமுக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் தென் மண்டலத்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது திடீரென போடப்பட்ட திட்டம் கிடையாது. கடந்த ஒரு மாதமாகவே இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முதல்நாள் முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைத்தார்.

அதன்பின் நெல்லைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு அரசு சார்பாக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் இன்று கலந்து கொண்டனர்.

AM, PM பார்க்காத CM என்பதைவிட MM-CM ஆக T.N நம்பர்-1 என உருவாகனும்.. முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு AM, PM பார்க்காத CM என்பதைவிட MM-CM ஆக T.N நம்பர்-1 என உருவாகனும்.. முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

ஸ்டாலின்

ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினின் இந்த தென்னக பயணம்தான் திமுக வட்டாரத்தில் கடந்த 3 நாட்களாக லைம் லைட்டில் இருக்கும் விஷயம். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின் பெரிதாக தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யவில்லை. கொரோனா காலம் அதன்பின் நடந்த அரசியல் கூட்டங்களால் பெரும்பாலும் முதல்வர் ஸ்டாலின் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களுக்கே சென்றார். அதோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் பிரச்சாரம் மட்டுமே நடத்தினார். இதனால் தென் மண்டலத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை.

தென் மண்டலம்

தென் மண்டலம்

தென் மண்டலத்தில் பெரும்பாலும் திமுக அமைச்சர்களே கவனம் செலுத்தினர். மதுரையிலேயே மூர்த்தி, பிடிஆர் என்று இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அதோடு கனிமொழி, அப்பாவு போன்ற முக்கிய தலைவர்கள் தென் மண்டலத்தில் உள்ளனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் பெரும்பாலும் தென் மண்டலம் பற்றி கவலைப்பட்டுக்கொள்ளவில்லை. இந்த இந்த முறை அவர் தென் மண்டலங்களுக்கு மேற்கொண்டு இருக்கும் பயணம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நெல்லை

நெல்லை

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் நெல்லை சென்ற போதும் அங்கே நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார். நெல்லையில் நிர்வாகிகளை பார்த்த முதல்வர் ஸ்டாலின்.. அவர்களிடம் சர்க்யூட் ஹவுசில் பல்வேறு கேள்விகளை கேட்டு இருக்கிறார். அங்குதான் முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல்நாள் இரவு தங்கினார். முதல்நாள் இரவு தூங்கும் முன் இந்த சந்திப்பை ஸ்டாலின் நடத்தி உள்ளார். மாவட்ட செயலாளர்கள். நகர் செயலாளர்கள் சில முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 கேள்வி

கேள்வி

இரவோடு இரவாக நடந்த இந்த 30 நிமிட சந்திப்பில் ஸ்டாலின் பல கேள்விகளை கேட்டு இருக்கிறார், முக்கியமாக உட்கட்சி தேர்தல் பற்றி கேட்டுள்ளார். அதோடு அதிமுக மோதலால் தென் மண்டலத்தில் திமுக கூடுதல் இடங்களை பெறுவது பற்றியும் பேசி உள்ளார். இது போக நிர்வாகிகள் இடையே இருக்கும் மோதல் பற்றி தனக்கு வந்த ரிப்போர்டுகளை வைத்தும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் மட்டும் இல்லை இனி தென் மண்டலத்திலும் என் போகஸ் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

English summary
What did CM Stalin say to cadres during his stay in Thirunelveli?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X