உணவு, தண்ணீர் மீது நாட்டமில்லாத அரிசிக் கொம்பன்.. உடல்மெலிந்த சோகம்.. சாணத்தை பரிசோதிக்க முடிவு
நெல்லை: நெல்லை மாவட்டம் அருகே கோதையாறு பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை உடல் மெலிந்து காணப்படுகிறது. இதனால் அதன் மலத்தை சோதனைக்கு அனுப்ப வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் மேகமலைப்பகுதி மக்களை பீதியிலும் அச்சத்திலும் ஆழ்ந்தி வந்தது கேரளாவை சேர்ந்த அரிசிக் கொம்பன் யானை. இது மூணாறு பகுதியை சேர்ந்தது.

இந்த யானை கம்பம் பகுதிகளில் சுற்றித் திரிந்த போது தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிய பால்ராஜ் என்பவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த பால்ராஜ் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். ஆனாலும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில் அந்த யானையை கடந்த 6 ஆம் தேதி அன்று 3 மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். வழியோர பகுதிகளில் அரிசிக் கொம்பனின் ஆக்ரோஷத்தை தணிக்க மேலும் இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தின் மணிமுத்தாறு பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி 45 கி.மீ. தொலைவு மலை மீதுள்ள மாஞ்சோலைக்குள் கொண்டு வந்தனர். மயக்க ஊசியின் தாக்கத்தால் 4 நாட்கள் உணவு உட்கொள்ளாமலும் 2 நாட்கள் தண்ணீர் குடிக்காமலும் இருந்தது. இந்த நிலையில் இந்த அரிசிக் கொம்பன் மிகவும் பலவீனமடைந்துவிட்டது.
இதையடுத்து அரிசிக் கொம்பனை 25 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கோதையாறு பகுதியில் கொண்டு போய்விட்டனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க கொம்பனின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் உடல்நிலை குறைவாக இருந்த அரிசிக் கொம்பனுக்கு கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது.
இந்த நிலையில் அரிசிக் கொம்பன் யானை பார்ப்பதற்கு உடல்நலக் குறைவுற்று காணப்படுகிறது. கோதையாறு பகுதியில் குட்டியாறு இடத்தில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து யானை விடப்பட்ட இடத்தைவிட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வருகிறது. உடல் மெலிந்து காணப்படுவதால் மருத்துவ சிகிச்சை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. அது போல் அதன் சாணத்தை எடுத்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications