வில்லேஜ் குக்கிங் சேனலின் "இன்னைக்கு ஒரு புடி" தாத்தாவின் உடலுக்கு என்ன பாதிப்பு?
நெல்லை: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரியதம்பியின் உடல்நிலையில் என்ன பாதிப்பு? அவருக்கு ஏன் நவீன மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது?
தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் சமையலுக்கான யூடியூப் சேனல்கள் இருந்து வரும் நிலையில் வில்லேஜ் குக்கிங் சேனல் மிக பெரிய உயரத்தை அடைந்துள்ளது. இந்த சேனலுக்கு 2.4 கோடி பேர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர்.

இந்த சேனலில் சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச் செல்வன், முத்து மாணிக்கம் ஆகியோருடன் பெரிய தம்பி தாத்தா வழிநடத்தி வருகிறார். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
இவர் தினந்தோறும் விதவிதமான சமையல்களை செய்து அதை தாங்கள் சுவைப்பது இல்லாமல் ஆதரவற்ற இல்லங்களுக்கும் கொடுத்து அனுப்பி வைப்பர். இதனால்தான் எத்தனையோ யூடியூப் சேனல்கள் வந்தாலும் இந்த சேனலுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.
கிராமத்து இளைஞர்கள் எல்லாம் ஒன்றுகூட வயதான பெரியதம்பி தாத்தாவுடன் கன்மாயில் குளித்துக் கொண்டு அங்கு மீன், நண்டு, ஊமத்தங்காய் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து சமைப்பர். தமிழகத்தில் அறியப்பட்ட இவர்கள், ராகுல் காந்தியின் வருகையால் மேலும் பிரபலமடைந்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தின் போது காங்கிரஸின் ராகுல் காந்தி கூட இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தயிர் பச்சடி செய்தார். இந்த சேனலின் முக்கியமானவர் தாத்தா பெரியதம்பி. இன்னைக்கு ஒரு புடி என தாத்தா சொல்லும் போது அந்த விதம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
இவர்களின் கள்ளம் கபடமில்லாத விளையாட்டு பேச்சுகள், ஆர்ப்பாட்டம் இல்லாத சமையல் இதற்காகவே இவருக்கு நிறைய பேர் ரசிகர்களாக உள்ளனர். இந்த சேனலுக்கு ஜீவ நாடியே தாத்தாதான். அவர்தான் சமையல் செய்வார். மற்றவர்கள் ஒவ்வொரு வேலையை பார்ப்பார்கள். தாத்தா, இளைஞர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் செயல்படுவார்.
இன்னைக்கு ஒரு புடி என்பதுதான் தாத்தாவின் பஞ்ச்சாக இருக்கும். இவர்கள் கமல்ஹாசனின் விக்ரம் 2 படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தனர். இது யாருக்குமே தெரியாது. சினிமாவில் இவர்களை பார்த்ததுமே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அது போல் இவர்கள் உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் பங்கேற்று தங்களது பயணம் எப்படி இருந்தது என்பதை விளக்கினர்.
இந்த நிலையில் பெரியதம்பி தாத்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கடந்த மார்ச் 28ஆம் தேதி தகவல்கள் வெளியானது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்இந்த தகவலையும் சுப்பிரமணியன் வேலுசாமிதான் பகிர்ந்திருந்தார். தாத்தா தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் பூரணநலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும். மீண்டும் புதிய சமையல் நிகழ்ச்சியில் இன்னைக்கு ஒரு புடி என்ற வசனத்தை கேட்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாத்தாவின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டி நெல்லை வந்த ராகுல் காந்தியிடம் குக்கிங் சேனல் நிர்வாகத்தினர் கேட்டதாகவும் அதற்கு அவர் இப்படியெல்லாம் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என கறாராக பேசி அனுப்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை வில்லேஜ் குக்கிங் சேனல் கேமராமேன் மற்றும் அட்மின் சுப்பிரமணியன் மறுத்துள்ளார். மேலும் இது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications