Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது வேற லெவல்.. எப்படி இப்படி யோசிக்கிறாங்க? நெல்லை கலெக்டர் எடுத்த முடிவு.. குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி; நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எடுத்த முடிவு ஒன்று மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.

தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக பாபநாசம் அருகேயுள்ள அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. அருவி பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் வெள்ளம்: வரலாறு காணாத மழையால் எல்லீங்க நாயக்கன்பட்டி - செங்கோட்டை கிராமங்களுக்கு இடையிலான தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் விருதுநகரில் விடிய விடிய பெய்த கனமழையால் சதுரகிரியின் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

Why Thirunelveli collector decision getting applause amid the flood and heavy rain in southern districts?

கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை தீயணைப்புத்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து கயிறுகள் மூலம் மீட்டனர். தூத்துக்குடியில் தொடர் கனமழையால் கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால், 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68%மும், திருநெல்வேலியில் 135%மும், கன்னியாகுமரியில் 103%மும், தென்காசியில் 80%மும் கூடுதலாக பதிவாகியுள்ளது.

( கொட்டும் மழையில்.. சரசரவென பஸ்ஸில் ஏறி.. கனிமொழி செய்த சம்பவம்.. தூத்துக்குடியில் துடிப்பு!)

ஸ்டாலின் ஆலோசனை: வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை செய்துள்ளார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் உத்தரவுகள் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை ஆட்சியர் முடிவு; இந்த நிலையில்தான் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எடுத்த முடிவு ஒன்று மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்க்க 17.12.2023 காலை முதல் அறிவுறுத்தப்பட்டு 6pm வரை அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ளார்.

கடும் புயல் வெள்ளத்திற்கு இடையே.. இந்த விஷயம் பற்றி யோசித்தது.. கர்ப்பிணிகள் பற்றி யோசித்தது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சியின் இந்த யோசனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆட்சியர்கள் நியமனம்: தென் தமிழ்நாட்டில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தென் மாவட்டங்களை நோக்கி அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதேபோல் விரைவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

Why Thirunelveli collector decision getting applause amid the flood and heavy rain in southern districts?

கன்னியாகுமரி - திரு. சு. நாகராஜன் இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர்.

திருநெல்வேலி- - டாக்டர் இரா. செல்வராஜ். இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

தூத்துக்குடி - திருமதி.பா.ஜோதி நிர்மலா இ.ஆ.ப., அரசு செயலாளர். வணிகவரித் துறை

தென்காசி - திரு.சுன்சோங்கம் ஜதக் சிரு, இ.ஆ.ப., அரசு செயலாளர். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்களும் சிலரும் விரைவில் நெல்லையை நோக்கி விரைய உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+