கொட்டும் மழையில்.. சரசரவென பஸ்ஸில் ஏறி.. கனிமொழி செய்த சம்பவம்.. தூத்துக்குடியில் துடிப்பு!
சென்னை: டெல்லியில் இருந்து அவசர அவசரமாக தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி இன்று காலை வந்தார் . அங்கே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார்.
தென் தமிழ்நாட்டில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தென் மாவட்டங்களை நோக்கி அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதேபோல் விரைவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர்.
கன்னியாகுமரி - திரு. சு. நாகராஜன் இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர்.
திருநெல்வேலி- - டாக்டர் இரா. செல்வராஜ். இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
தூத்துக்குடி - திருமதி.பா.ஜோதி நிர்மலா இ.ஆ.ப., அரசு செயலாளர். வணிகவரித் துறை
தென்காசி - திரு.சுன்சோங்கம் ஜதக் சிரு, இ.ஆ.ப., அரசு செயலாளர். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்களும் சிலரும் விரைவில் நெல்லையை நோக்கி விரைய உள்ளனர்.

அமைச்சர்கள் செல்கின்றனர்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் நெல்லைக்கு செல்ல உள்ளார். அவர் தற்போது சேலத்தில் உள்ளார். அங்கே திமுக மாநாட்டு பணிகளை நேற்று பார்வையிட்டார். இந்த நிலையில் விரைவில் அவர் நெல்லைக்கு செல்ல இருப்பதாக தகவ்லக்ள் வருகின்றன.
அமைச்சர்கள் உடனே நெல்லைக்கு புறப்பட வேண்டும், தென் மண்டல எம்பிக்கள் தென் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
( கடலோரத்தில் கூட இல்லை.. மத்தியில் இருக்கும்.. மதுரைக்கு இன்று ஏன் ரெட் அலர்ட்.. என்ன காரணம்?)
கனிமொழி வந்தார்: டெல்லியில் இருந்து அவசர அவசரமாக தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி இன்று காலை வந்தார் . அங்கே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். டெல்லியில் குளிர்கால கூட்டத்தொடருக்காக இருந்த கனிமொழி அவசரமாக தூத்துக்குடிக்கு வந்தார்.
அங்கே சாலைகளில் தேங்கி இருக்கும் வெல்லத்தை பார்வையிட்டார். சாலையில் வெள்ளம் தேங்கி இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அதேபோல் அங்கே சென்ற பேருந்து ஒன்றி சரசரவென்று ஏறி.. உள்ளே இருக்கும் பெண்களிடம் பேசினார். நீங்கள் எந்த ஊர்.. உங்கள் ஊரில் நிலவரம் என்ன? அங்கே நிலைமை எப்படி இருக்கிறது.. என்று விசாரித்தார். அதை தொடர்ந்து அங்கே இருக்கும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று அவர் வெள்ள மீட்பு பணிகளை ஈடுபட உள்ளார்.

காணொளி கூட்டம்: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு. அதி கனமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும். பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும். மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:












Click it and Unblock the Notifications