கடலோரத்தில் கூட இல்லை.. மத்தியில் இருக்கும்.. மதுரைக்கு இன்று ஏன் ரெட் அலர்ட்.. என்ன காரணம்?
சென்னை: தென் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில்.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் மதுரைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பின்வரும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் (அதிகனமழை) விடுக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர்
மதுரை
தேனி

பின்வரும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (கனமழை) விடுக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
திண்டுக்கல்
கன்னியாகுமரி
கோவை
திருப்பூர்
சிவகங்கை
பின்வரும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்( மிதமான மழை) விடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
அரியலூர்
பெரம்பலூர்
திருச்சி
மதுரைக்கு ரெட் அலர்ட் ஏன்: இதில் மதுரைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை இதனால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
( புயலே உருவாகவில்லை.. ஆனாலும் தென் மாவட்டங்களில் ஏன் வரலாறு காணாத மழை? உண்மையான காரணம் என்ன?)
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அதிகனமழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 24 மணி நேரத்தில் பெய்த 2வது அதிகபட்ச மழைப்பொழிவாக இது பதிவாகியுள்ளது. இதற்குமுன் 1992ம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள காக்காச்சியில் 96.5 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
கன்னியாகுமரி பகுதிக்கு அருகில் உள்ள கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. இது கன்னியாகுமரிக்கு மிக மிக அருகில் உள்ளது. அதுதான் அங்கே தொடர்ந்து மழை ஏற்பட காரணம். இதனால் மழையின் ஆக்ரோஷமும் மிக மிக அதிகமாக உள்ளது. இங்கே காணப்படும் அத்தகைய வலுவான குவிப்பு மற்றும் கிழடுக்கு சுழற்சி.. மழையை கொடுக்கும் மேக பெல்ட், பட்டைகளை அப்படியே வைத்திருக்கிறது. இதனால் மழை பேண்டுகளை நோக்கி காற்று அதிகம் வருகிறது. இந்த அழுத்தம் மழை மேகங்களை இன்னும் வலுவாக வைத்து இருக்கிறது.
இந்த மழை மேகங்கள் நேரம் செல்ல செல்ல உள் மாவட்டங்களை நோக்கி செல்லும். அதாவது விருதுநகர், மதுரை நோக்கி இந்த மழை மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செல்லும். நேரம் செல்ல செல்ல இந்த மேகங்கள் உள்நோக்கி செல்வதால்.. மதுரைக்கு இன்று பிற்பகலில் மழை மேகங்கள் அதிக அளவில் வரும்.
இதன் காரணமாகவே மதுரைக்கு தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த 3-4 மணி நேரங்களுக்கு மதுரையில் கண்டிப்பாக மிக கனமழை இதனால் பெய்யும்.

வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications