திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“நாங்க குடிக்கிற இடம்” அட்டி மோதலில் இளைஞர் அடித்துக்கொலை.. விபத்தில் இறந்ததாக நாடகம் - 3 பேர் கைது!

Google Oneindia Tamil News

நெல்லை : பாளையங்கோட்டை அருகே மது அருந்தும்போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் உயிரிழந்த நிலையில் போலீசிடம் இருந்து தப்பிக்க விபத்தில் அடிபட்டதாக நாடகமாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல் அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல்

நள்ளிரவில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது குடிக்க

மது குடிக்க

நெல்லை பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி ஜே.ஜே நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (27). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு சுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மது அருந்த சென்றுள்ளனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

அங்கு அதே பகுதியை சேர்ந்த சிவநம்பி, முருகன், செல்வம் உட்பட 4 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுப்பிரமணியன் சிவ நம்பியிடம் இங்கு எப்படி வந்து நீங்கள் மது குடிக்கலாம் என்று கூறி பாட்டிலால் தாக்கியுதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சிவநம்பி தரப்பினர் சுப்பிரமணியனை பிடித்து தள்ளியுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணியனை சிவ நம்பி மற்றும் 3 பேர் சேர்ந்து சரமாரியாக மிதித்துள்ளனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதில் மயக்கமடைந்த சுப்பிரமணியன் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்த சிவ நம்பி மற்றும் அவரது நண்பர்கள் சுப்ரமணியனை மீட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மது போதையில் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சுப்பிரமணியனை கொண்டு சென்றனர். அங்கு அதிகாலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

விபத்து என நாடகம்

விபத்து என நாடகம்

உயிரிழந்த நபர் குறித்து மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் கேட்டபோது சுப்பிரமணியன் விபத்தில் கீழே விழுந்ததாக முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் மது குடிப்பதில் ஏற்பட்ட மோதலின்போது சுப்பிரமணியனை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார் சிவ நம்பி உள்பட 3 பேரை கைது செய்தனர்.

English summary
Youth beaten to death in a clash near while drinking alcohol near Palayamkotai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X