Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேட்டில் இருந்து 32 கிமீ துரத்தில் 3 மதுக்கடைகள்.. குவிந்த சென்னைவாசிகள்..3ம் குளோஸ்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: சென்னைவாசிகள் அதிக அளவில் குவிந்தததால் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 மதுக்கடைகள் மூடப்பட்டது.

Recommended Video

    எந்த பகுதியில் எவ்வளவு மது விற்பனை? முழு தகவல்

    சென்னையில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

    3 tasmac shops closed near ponneri thiruvallur district

    ஆனால் சென்னையில் மட்டும் கொரோனா பரவின் வேகம் காரணமாக திறக்க அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் திறக்கப்படவில்லை. அரசு குறைந்த பட்சம் சென்னையின் இருந்து 50 கிலோமீட்டர் தள்ளி தான் மதுக்கடைகளை திறந்து இருந்தது.

    அதாவது திருவள்ளூர், செங்கல்பட்டில் அல்லது ஸ்ரீபெரும்புதூர் அருகே அல்லது ஈசிஆர் சாலையில் கானத்தூரையும் தாண்டி திருப்போரூர் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கோயம்பேட்டில் 36 கிலோமீட்டர் தூரமுள்ள பென்னேரி பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    இதனிடையே சென்னையில் இருந்து யாரும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்று மது வாங்க கூடாது.மீறி சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் எனறு எச்சரித்தது. அதையும் மீறி பலரும் மதுவாங்க திருவள்ளூர் மாவட்டத்திற்கு குவிந்து வருகிறார்கள். இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளை தாண்டி சென்று மதுவாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    குறிப்பாக சென்னைக்கு மிக அருகே திறக்கப்பட்ட கடைகளாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போராக்ஸ், புதுவயல் தச்சூர் ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளில் சென்னைவாசிகள் அளவுக்கு அதிகமாக குவிந்தனர். இதனால் இந்த மூன்று கடைகளும் இன்று மூடப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து வெறும் 32 கிலோ மீட்டர் தூரத்தில் திறக்கப்பட்டிருந்த கடைகளான இவை மொத்தமாக மூடப்பட்டுள்ளன. எனினும் இன்னும் சில கடைகள் பென்னேரியை தாண்டி உள்ள பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளிலும் சென்னை வாசிகள் குவிந்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+