இந்த 60 வயசு தாத்தா இருக்காரே.. 4 வயசு குழந்தையை.. மிட்டாய் கொடுத்து.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்
4 வயது சிறுமியை சீரழித்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்
திருவள்ளூர்: இதோ இந்த 60 வயசு தாத்தா இருக்காரே.. மிட்டாய் கொடுத்தே 4 வயசு குழந்தையை நாசம் செய்துள்ளார்.. விடுமா நம்ம போலீஸ்... தூக்கி ஜெயிலுக்குள் உட்கார வைத்துவிட்டது!
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்.. 60 வயதை கடந்தவர்.. அப்பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

கடையில் பெரும்பாலும் சாக்லேட், மிட்டாய்களைதான் நிரப்பி வைத்திருப்பார்.. அதனால் ஏராளமான சிறுவர், சிறுமிகள் இவர் கடைக்கு தின்பண்டங்களை வாங்க வருவர்.
இதில் சிறுமிகள் வந்துவிட்டால், ராமதாசுக்கு கொண்டாட்டம்.. கடைக்கு வரும் அந்த பிஞ்சுகளிடம் விளையாடுவது, உடலில் கண்ட இடங்களில் கையை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது என்றே இருந்துள்ளார்.
இப்படித்தான் 4 வயசு குழந்தையும் கடைக்கு மிட்டாய் வாங்க வந்திருக்கிறாள்.. மிட்டாயை ஒரு கையில் கொடுத்துவிட்டு, அந்த குழந்தையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் ராமதாஸ்.. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த குழந்தை இதை பற்றி பெற்றோரிடம் சொல்லவும்தான் கொதித்து போனார்கள்.
உடனடியாக இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி மகளிர் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது.. ராமதாசிடம் விசாரணை நடத்தியதில் நடந்த தவறை ஒப்புக் கொண்டார்.. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் தாத்தா ராமதாஸை புழல் ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications